ஊழியர்களின் சம்பளத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவர பரிந்துரை

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் ஏற்­பட்ட சரி­வி­லி­ருந்து மீண்ட அல்­லது மீண்­டு­வ­ரும் நிறு­வ­னங்­கள், ஊதி­யக் குறைப்­பிற்கு ஆளான ஊழி­யர்­க­ளின் ஊதி­யத்­தைப் பழைய நிலைக்­குக் கொண்டு ­வர முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும் என்று தேசிய சம்­பள மன்­றம் பரிந்­து­ரைத்­துள்­ளது.

தற்­கா­லி­கப் பணி­நீக்­கம் போன்ற ஊதி­யம் சார்ந்த செல­வுச் சேமிப்பு நட­வ­டிக்­கை­களை அந்­நி­று­வ­னங்­கள் திரும்­பப் பெற வேண்­டும் என்று மன்­றம் கேட்­டுக்­கொண்­

டுள்­ளது.

இன்­னும் சிர­மத்­தி­லி­ருந்து மீள முடி­யா­மல் தடு­மா­றி­வ­ரும் நிறு­வ­னங்­கள், முடிந்த அள­விற்கு ஊதி­யம் சாரா செல­வுச் சேமிப்பு நட­வ­டிக்­கை­க­ளைப் பரி­சீ­லிக்க வேண்­டும் என்­றும் ஊழி­யர்­க­ளுக்கு வரு­டாந்­தி­ரக் கூடு­தல் சம்­ப­ளத் தொகையை வழங்க முயல வேண்­டும் என்­றும் மன்­றம் கூறி­யுள்­ளது.

தொழில் மற்­றும் ஊழி­ய­ரணி உரு­மாற்­றம், பொருத்­த­மான செல­வுச் சேமிப்பு நட­வ­டிக்­கை­கள் மூலம் ஊழி­யர்­க­ளைத் தக்­க­வைத்­தல், பாதிக்­கப்­பட்ட தொழிற்­பி­ரி­வு­

க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்கு மறு­ப­யிற்சி அளித்து, நிறு­வ­னத்­திற்­குள்­ளேயே புதிய வேலை­களில் அமர்த்­து­தல் ஆகி­ய­வற்­றுக்கு நிறு­வ­னங்­கள், அர­சாங்­கத்­தின் ஆத­ர­வைத் தொடர்ந்து பெற­லாம்.

அதன்­பி­ற­கும் செலவு நெருக்­கடியை எதிர்­கொள்­ளும் நிறு­வ­னங்­கள், வேலை­க­ளைப் பாது­காக்­கும் நோக்­கில் தற்­கா­லிக ஊதி­யக் குறைப்பு நட­வ­டிக்­கையை அமல்

­ப­டுத்­த­லாம் என்று மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!