மலேசியா தனது பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளியலைச் சரிவில்இருந்து காப்பாற்றி மீண்டும் வளர்ச்சி அடையவைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நடப்பாண்டு வரவுசெலவுத்
திட்டத்தைவிட பெரிய வரவு
செலவுத் திட்டத்தை அது தாக்கல் செய்துள்ளது.
அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஆறு விழுக்காடு அளவு பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பொருளியல் 5.5 விழுக்காட்டிலிருந்து 6.5 விழுக்காடு வரை வளர்ச்சி காணும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பொருளியலை உயிர்ப்பிக்க அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு 332 பில்லியன் ரிங்கிட்டுக்கும் ($108 பில்லியன்) அதிகமான தொகையை மலேசிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.