புதிதாக 4,248 பேருக்கு கொவிட்-19 தொற்று; மேலும் 16 பேர் உயிரிழப்பு

புதிதாக 4,248 பேருக்கு கொவிட்-19 தொற்று; மேலும் 16 பேர் உயிரிழப்பு

1 mins read
7a9b05a5-2851-4793-b6e8-81c39f0554bc
தேக்கா நிலையத்தில் பகல்நேர கூட்டம். படம்: திமத்தி டேவிட் -
Google News Preferred Icon

கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சிங்கப்பூரில் மேலும் 16 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் 44 முதல் 90 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) தெரிவித்தது.

அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன. உயிரிழந்த அந்த 44 வயது நபர், கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் என்று அமைச்சு கூறியது.

இதற்கிடையே, சிங்கப்பூரில் புதிதாக 4,248 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூக அளவில் 3,710 பேரும் விடுதிகளில் வசிக்கும் 536 வெளிநாட்டு ஊழியர்களும் அவர்களில் அடங்குவர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் இருவருக்கும் தொற்று உறுதியானது.