அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் உலக மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்க 20 பெரிய பொருளியல் (ஜி-20) நாடுகளின் சுகாதார, நிதி அமைச்சர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
மேலும் வருங்காலத்தில் தொற்றக்கூடிய வேறுவகை கொள்ளைநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான பணிக்குழு ஒன்றையும் அவர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
இதற்கென தனித்துவமான நிதி வசதி ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் இந்தோனீசியா தெரிவித்த யோசனை தொடர்பில் ஜி-20 உடன்பாடு எதையும் ஏற்படுத்தவில்லை.
இருந்தபோதிலும், கொள்ளைநோய் எதிர்ப்பு ஆயத்தநிலை, கொள்ளைநோய் தடுப்பு மற்றும் சமாளிப்பு போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டுத் தெரிவுகளை பணிக்குழு முன்வைக்கும் என அமைச்சர்கள் கூறி உள்ளனர்.
"உலக மக்களில் குறைந்தபட்சம் 40 விழுக்காட்டினருக்கு இவ்வாண்டு இறுதிக்குள்ளும் 70 விழுக்காட்டினருக்கு 2022ஆம் ஆண்டு நடுப்பகுதி வாக்கிலும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்னும் உலக இலக்கை அடைய உதவுவோம்.
"அதற்காக தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய மருத்துவத் தயாரிப்பு
களின் விநியோகத்தை வேகப்படுத்து வதற்கான நடவடிக்கையில் ஈடு
படுவோம். இது தொடர்பாக விநியோகத்திலும் நிதியுதவியிலும் எழும் சிக்கல்களைக் களைவோம்," என்று ஜி-20 அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.