திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை கேலாங் சிராய் சந்தை வரும் மூன்று நாட்களுக்கு மூடப்படள்ளது. அங்கு கடந்த ஏழு நாட்களாக கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து இந்த மூடல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையைச் சுத்தப்படுத்துவதற்காகவும் கிருமிகளை அழிப்பதற்காகவும் அது மூடப்படுவதாகக் குறிப்பிடும் சுற்றறிக்கைகளை தேசிய சுற்றுப்புற அமைப்பு வெளியிட்டது. இதற்கு முன்னதாகவே மூடலைப் பற்றிய குறுஞ்செய்தி ‘வாட்ஸ்அப்’ மூலமாகப் பரவி அங்குள்ள கடைக்காரர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
தீபாவளிக்காக பொருள் வாங்க வருபவர்கள் இதனால் பாதிப்படைவர் என்று அச்சந்தையில் இறைச்சிக் கடை வைத்திருக்கும் முகம்மது ஷாகிட், 32, தெரிவித்தார்.