தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேருந்து, ரயில் கட்டணம் கூடுகிறது

1 mins read
e8f24d44-f673-4dde-808f-e87cd18fc5ef
வரும் டிசம்பர் 26ஆம் தேதியில் இருந்து பெரியவர்களுக்கான பயணக் கட்டணம் 3 முதல் 4 காசு கூடும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வரும் டிசம்பர் மாதம் 26ஆம் தேதியில் இருந்து பேருந்து, ரயில் பயணக் கட்டணம் 2.2% உயரும் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் அறிவித்துள்ளது.

அதாவது, பெரியவர்களுக்கான பயணக் கட்டணம் 3 முதல் 4 காசு கூடும். சலுகைக் கட்டண அட்டைகளைப் பயன்படுத்தும் மூத்த குடிமக்கள், மாணவர்கள், உடற்குறையுள்ளோர், குறைந்த வருமான ஊழியர்களுக்கான கட்டணம் ஒரு காசு கூடும்.

ரொக்கக் கட்டணம், ஒருமுறை மட்டும் செல்வதற்கான பயணச்சீட்டு, மாதாந்திரச் சலுகைக் கட்டண மற்றும் பயண அட்டைகளுக்கான கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

14.2 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு, எடுத்துக்காட்டாக, செங்காங்கில் இருந்து ராஃபிள்ஸ் பிளேஸ்வரை ரயிலில் செல்ல 3 காசு கூடுதலாகச் செலுத்த வேண்டும். 14.2 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணத்திற்குப் பெரியவர்கள் 4 காசு கூடுதலாகச் செலுத்த வேண்டும்.