வாராந்திர தொற்று விகிதம் சற்று உயர்ந்தது

வாராந்திர தொற்று விகிதம் சற்று உயர்ந்தது

1 mins read
330856cd-f713-453e-9084-b2622846e65c
தொடர்ந்து நான்காவது நாளாக தொற்று உயர்வு விகிதம் 1க்குக்கீழ் உள்ளது. படம்: திமத்தி டேவிட் -

கொவிட்-19 வாராந்திர தொற்று உயர்வு விகிதம் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 6) சற்று அதிகரித்தது. வெள்ளிக்கிழமை 0.81ஆக இருந்த அந்த விகிதம், நேற்று 0.83ஆக பதிவானது.

தொடர்ந்து நான்காவது நாளாக தொற்று உயர்வு விகிதம் 1க்குக்கீழ் உள்ளது.

தொற்று உயர்வு விகிதம் 1க்குமேல் இருந்தால், வாராந்திர தொற்றுப் பாதிப்பு இன்னும் உயர்கிறது என்பதைக் குறிக்கிறது.

இதற்கிடையே, கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சிங்கப்பூரில் மேலும் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் 60 முதல் 98 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சனிக்கிழமை புதிதாக 3,035 பேருக்குத் தொற்று உறுதியானது.