சென்னை நகருக்குச் சிவப்பு எச்சரிக்கை

2015ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆக அதிக மழைப்பொழிவு; நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வட­கி­ழக்­குப் பரு­வ­மழை தொடங்கி விட்ட நிலையில் கடந்த இரு நாள்­க­ளா­கத் தமிழ்­நாட்­டின் தலை­ந­கர் சென்­னை­யி­லும் மாநி­லத்­தின் பிற பகு­தி­க­ளி­லும் கன­மழை கொட்­டித் தீர்த்து வரு­கிறது.

சென்­னை­யில் கடந்த 2015ஆம் ஆண்­டிற்­குப் பிறகு ஒரே நாளில் 20 சென்­டி­மீட்­ட­ருக்­கு­மேல் மழை பதி­வா­னது. நேற்று முன்­தி­னம் இர­வி­லி­ருந்து தொடர்ந்து 12 மணி நேர­மாக இடை­வி­டாது பெய்த மழை­யால் பல பகு­தி­களி­லும் வெள்­ள­நீர் பெருக்­கெ­டுத்து ஓடி­யது. வீடு­க­ளுக்­குள் நீர் புகுந்­த­தால் மக்­க­ளின் இயல்­பு­வாழ்க்கை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டது.

வெள்­ள­நீர் தேங்­கி­ய­தால் சில பகு­தி­களில் ரயில் போக்கு­வ­ரத்து நிறுத்­தி­வைக்­கப்­பட்­டது. முன் எச்சரிக்கையாக சில பகு­தி­களில் மின்­இ­ணைப்பு துண்­டிக்­கப்­பட்­டது. ஆறு சுரங்­கப்­பா­தை­கள் மூடப்­பட்­டன.

இன்­னும் நான்கு நாள்­க­ளுக்­குக் கட­லோ­ரப் பகு­தி­களில் கன­மழை பெய்­ய­லாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்­னு­ரைத்­துள்­ளதை அடுத்து, சென்­னைக்­குச் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

புழல், செம்­ப­ரம்­பாக்­கம் உள்­ளிட்ட ஏரி­களிலிருந்து உப­ரி­நீர் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ள­தால் ஆற்­றோ­ர­மாக வசிக்­கும் மக்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்­குச் செல்­லும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

இத­னை­ய­டுத்து, தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின், சென்­னை­யில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு நேற்று நேரில் சென்று ஆய்­வு­செய்­தார்.

அதன்­பின், சென்னை, காஞ்சி­பு­ரம், திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­களில் உள்ள பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு இன்­றும் நாளை­யும் விடு­முறை விடப்­ப­டு­வ­தாக அவர் அறி­வித்­தார். தீபா­வ­ளித் திரு­நா­ளுக்­காகச் சொந்த ஊர் திரும்­பி­யுள்ள மக்­கள் இன்­னும் இரண்டு, மூன்று நாள்­க­ளுக்­குப் பிறகு சென்னை திரும்­பு­மா­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

சென்­னை­யில் மழை பாதிப்­பைக் கண்­கா­ணிக்க 15 ஐஏஎஸ் அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இத­னி­டையே, உற­வி­னர் எச்­ச­ரித்­தும் ஆற்­றைக் கடக்க முயன்­ற­வர் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்டு உயி­ரி­ழந்த சம்­ப­வம் மதுரை மாவட்­டத்தில் நிகழ்ந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!