கொவிட்-19 தொற்று: ஐநூற்றை நெருங்கும் உயிரிழப்பு

1 mins read
ff79c82f-ebaa-4bbb-b87f-83f97bc45925
சிங்கப்பூரில் வாராந்திர கிருமித்தொற்று உயர்வு விகிதம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஒன்றுக்குக் கீழே பதிவாகி இருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07-11-2021) புதிதாக 2,553 பேர்க்கு கொவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டது. முந்திய நாளைக் காட்டிலும் இது 482 குறைவு.

கொரோனா தொற்றால் 45 முதல் 89 வயதிற்குட்பட்ட மேலும் 17 பேர் மாண்டுவிட்டனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் சனிக்கிழமை 0.83ஆக இருந்த வாராந்திர கிருமித்தொற்று உயர்வு விகிதம், நேற்று 0.81ஆகக் குறைந்தது.

இவ்விகிதம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இறங்குமுகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள படுக்கைகளின் விகிதமும் 69.9 விழுக்காடாகக் குறைந்தது. சனிக்கிழமை இவ்விகிதம் 72.8 விழுக்காடாக இருந்தது.

கிருமித்தொற்றால் நேற்று மாண்டுபோன 17 பேரில், தடுப்பூசி போட்டிருந்த 85 வயதானவரைத் தவிர மற்ற அனைவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகளும் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 218,333 ஆகவும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 497 ஆகவும் உயர்ந்தது.

குறிப்புச் சொற்கள்
கொவிட்-19கொரோனாகிருமித்தொற்று