சிங்கப்பூர்-மலேசியா இடையே எல்லைத் திறப்பு

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் இம்மாதம் 29ஆம் தேதியில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி சிங்கப்பூர்-மலேசியா இடையே விமானப் பயணம் மேற்கொள்ளலாம்.

இதனால் கொவிட்-19 பரவல் காரணமாக வெகுநாள்களாகப் பிரிந்திருந்த குடும்பத்தினரும் நண்பர்களும் மீண்டும் ஒன்றிணைய வழிபிறந்துள்ளது. அதனுடன், ஊழியர்களும் வந்து செல்லலாம்; வணிகத் தொடர்புகளும் மீண்டும் தொடங்கும்.

சாங்கி விமான நிலையத்திற்கும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையே தடுப்பூசி பயணத்தடத் திட்டம் (விடிஎல்) தொடங்கவிருப்பது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் இன்று (நவம்பர் 8) ஒரு கூட்டறிக்கை வாயிலாகத் தெரிவித்தனர்.

இந்த எல்லைத் திறப்பு, விமானப் பயணத்திற்கு மட்டுமே பொருந்தும். கடற்பாலம் அல்லது துவாஸ் செகண்ட் லிங்க் வழியே தரைவழிப் போக்குவரத்து இதில் உள்ளடங்காது.

“கூடிய விரைவில் தரைவழிப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்தும் இருநாட்டுப் பிரதமர்களும் ஆராய்ந்து வருகின்றனர் என்று அந்தக் கூட்டறிக்கை தெரிவித்தது.

ஜோகூரிலும் சிங்கப்பூரிலும் பொதுச் சுகாதார நிலவரத்தைப் பொறுத்து, விடிஎல் திட்டத்தைப் போன்று, கடற்பாலம் மற்றும் செகண்ட் லிங்க் வழியே மீண்டும் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளுக்கு சிங்கப்பூர் ஏற்கெனவே ‘விடிஎல்’ திட்டத்தை அறிவித்துள்ளது.

‘விடிஎல்’ திட்டம் வழியாக சிங்கப்பூருக்கு வருவோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. மாறாக, சிங்கப்பூருக்குப் புறப்படும் முன்னரும் இங்கு வந்திறங்கியதும் அவர்கள் ‘பிசிஆர்’ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!