சிங்கப்பூர்- மலேசியா ஆகாய எல்லை திறப்பு நவம்பர் 29 முதல் விமானப் பயணம்; தடுப்பூசி போட்டுக்கொண்டோர் சென்று வரலாம்; தனிமை உத்தரவு இராது

சிங்­கப்­பூருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையில், தடுப்­பூசி போட்­டுக்­கொண்டவர்கள் நவம்­பர் 29 முதல் விமானப் பய­ணம் மேற்­கொள்ள லாம். அவர்­கள் தனிமை உத்தரவை நிறை­வேற்ற வேண்­டிய தேவை இல்லை.

சிங்­கப்­பூர்ப் பிர­த­மர் லீ சியன் லூங்­கும் மலே­சியப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பும் கூட்ட றிக்கை ஒன்­றில் நேற்று இதனை அறி­வித்­த­னர்.

சாங்கி விமான நிலை­யத்­திற்கும் கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யத்­திற்­கும் இடை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்­கான பய­ணத் திட்­டம் தொடங்­கும் என்று அந்­தக் கூட்­ட­றிக்கை தெரி­வித்­தது.

அந்த ஏற்­பாட்­டின்­படி, விமா­னப் பய­ணம் மட்­டுமே இப்­போது அனு­மதிக்­கப்­பட்டு உள்­ளது. தரை­வ­ழிப் பய­ணங்­கள் அந்­தத் திட்­டத்­தில் இடம்­பெ­ற­வில்லை.

என்­றா­லும் தரை­வ­ழிப் பயணத்தை விரை­வில் மீண்­டும் தொடங்­கு­வது பற்றி இரு நாட்டு பிர­த­மர்­களும் ஆர்­வத்­தோடு இருப்­ப­தாக அறிக்கை கூறியது.

ஜோகூ­ரி­லும் சிங்­கப்­பூ­ரி­லும் நில­வும் பொதுச் சுகா­தா­ரச் சூழ்­நி­லை­யைக் கருத்­தில்­கொண்டு தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் ஜோகூர் கடற்­பா­லம், இரண்டாவது இணைப்புப் பாலம் வழி­யாக பய­ணம் மேற்­கொள்ள இதே­போன்ற ஓர் ஏற்­பாட்டை அமல்­ப­டுத்­து­வ­தன் தொடர்­பில் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் விரி­வான அள­வில் பேச்சுவார்த்தை நடந்து வரு­வ­தா­க­வும் அதில் நல்ல முன்­னேற்­றம் ஏற்­பட்டு வரு­வது பற்றி இரு தலை­வர்­களும் மகிழ்ச்சி அடை­வ­தா­க­வும் அறிக்கை தெரி­வித்­தது.

இத­னி­டையே, இதுபற்றி ஃபேஸ்புக்­கில் கருத்து தெரி­வித்த பிர­த­மர் லீ சியன் லூங், மக்­களுக்குத் தடுப்­பூசி போடு­வ­தில் சிங்­கப்­பூரும் மலே­சி­யா­வும் நல்ல முன்னேற்றத்­தைச் சாதித்து இருப்­ப­தாகத் தெரி­வித்­தார்.

இதன் கார­ண­மாக இரு நாடு­களுக்கு இடை­யில் எல்லை கடந்த பய­ணங்­களைக் கட்­டம் கட்­ட­மாக தொடங்­கு­வ­தற்கு இது தக்க தரு­ணமாக இருக்கிறது என்­றாரவர்.

இதன் மூலம் இரு நாட்டுப் பொரு­ளி­ய­லுக்­கும் புத்­து­யிர் கிடைக்­கும். மக்­க­ளுக்கு இடையே யான உறவு மீண்­டும் இடம்­பெறும். இரு­த­ரப்பு உறவு பல­ம­டை­யும் என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோருக்­கான பயண ஏற்­பாட்­டின்­கீழ், சிங்­கப்­பூ­ருக்கு வரு­ப­வர்­கள் ஏழு நாள் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­ற­வேண்­டிய தேவை இல்லை.

அதற்குப் பதி­லாக சிங்­கப்­பூருக்குப் புறப்­படும்போதும் இங்கு தரை­யி­றங்­கும்போதும் கொவிட்-19 பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு அவர்கள் உட்­பட வேண்­டும்.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யில் விமா­னப் பயண வசதி கிடைக்­க­வி­ருப்­ப­தால் கொவிட்-19 கார­ண­மாக பல மாத கால­மாக பிரிந்தே இருக்­கும் குடும்­பத்­தா­ரும் நண்­பர்­களும் சந்­தித்து மகிழ வழி ஏற்­படும். ஊழி­யர்­கள் சிங்­கப்­பூர் வர­வும் வழி ஏற்­படும். தொழில்­துறை உற­வு­களும் மீண்டும் தொடங்­கும்.

சிங்­கப்­பூர்-கோலா­லம்­பூர் விமா­னப் பயண வழித்­த­டம் உல­கி­லேயே மிக­வும் சுறு­சு­றுப்­பா­ன­வற்­றுள் ஒன்று என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இரு நாட்டு எல்­லை­களும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்­பட்­டன.

அதற்கு முன் தரை எல்­லை­களைக் கடந்து இரு தரப்­பு­களில் இருந்­தும் அன்­றா­டம் ஏறத்­தாழ அரை மில்­லி­யன் மக்­கள் சென்று வரு­வார்­கள். எல்­லை­கள் மூடப்­பட்­டதை அடுத்து சிங்­கப்­பூ­ரில் ஏறக்­கு­றைய 100,000 மலே­சி­யர்­கள் நாடு திரும்ப முடி­யா­மல் முடங்கி இருக்­கி­றார்­கள் என்று கணக்­கிடப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!