தமிழகத்தில் மழை, வெள்ள அபாயம் நீடிப்பு; பலர் மரணம்

தமி­ழ­கத்­தில் சென்னை உள்­ளிட்ட பல பகு­தி­க­ளி­லும் ஐந்து நாட்­க­ளாக மழை பெய்து வரும் நிலை­யில் வங்­கக்­க­ட­லின் தென்­கி­ழக்­கில் காற்­ற­ழுத்­தத் தாழ்வு பகுதி உரு­வாகி உள்­ளது. அது நேற்று அதி­காலை 5.30 மணி­ய­ள­வில் ஆழ்ந்த காற்­ற­ழுத்­தத் தாழ்­வுப் பகு­தி­யாக வலு­வ­டைந்­தது. காலை 8.30 மணி­ய­ள­வில் அது தெற்கு வங்­கக்­க­ட­லின் மத்­திய பகு­தி­யில் மையம் கொண்­டி­ருந்­தது.

தொடர்ந்து காற்­ற­ழுத்­தத் தாழ்வு மண்­ட­ல­மாக வலு­வ­டைந்து இன்று கட­லூர் அருகே கரை­யைக் கடக்­கும் என்று சென்னை வானிலை ஆய்­வ­கம் முன்­னு­ரைத்து உள்­ளது.

அதன் கார­ண­மாக, சென்னை, திரு­வள்­ளூர், காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, விழுப்­பு­ரம், கட­லூர், ராணிப்­பேட்டை போன்ற மாவட்­டங்­களிலும் புதுச்­சே­ரி­யில் ஒரு சில இடங்­களிலும் இடி, மின்­ன­லு­டன் கன­ம­ழை­யும் அதி­க­ம­ழை­யும் பெய்­யக்­கூ­டும் என்­றும் அது கூறியது. அதன் கார­ண­மாக சென்னை, நாகப்­பட்­டி­னம், மயி­லா­டு­துறை, திரு­வாரூா், தஞ்­சாவூா், கடலூா், விழுப்­பு­ரம், புதுக்­கோட்டை, சிவ­கங்கை, ராம­நா­த­பு­ரம் மாவட்­டங்­கள் மற்­றும் புதுச்­சேரி, காரைக்­கால் பகு­தி­க­ளுக்கு நேற்று அறி­விக்­கப்­பட்ட சிவப்பு வண்ண எச்­ச­ரிக்கை இன்­றும் தொட­ரும் என்று அறி­விக்கப்பட்டு உள்ளது. எட்டுப் பேர் வரை மரணமடைந்தனர்.

சென்னை, காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு, நாகப்­பட்­டி­னம், தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், மயி­லா­டு­துறை மாவட்­டங்­களில் உள்ள பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு நேற்­றும் இன்­றும் விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. வட­க­ட­லோர மாவட்­டங்­கள், புதுச்­சேரி, காரைக்­கால் பகு­தி­களில் இன்று (நவம்­பர் 11) காலை முதல் தரைக்­காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்­தில் வீசக்­கூ­டும் என எச்­ச­ரிக்­கை­யும் விடுக்­கப்­பட்டு உள்­ளது. எனவே, சென்னை மக்­கள் வீட்­டை­விட்டு வெளி­யே­று­வ­தைத் தவிர்க்­கு­மா­றும் தேவை­யான உண­வுப்­பொ­ருட்­களை வாங்கி வைத்­துக்­கொள்­ளு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ள­தாக சென்னை மாந­க­ராட்சி ஆணை­யா­ளர் ககன்­தீப் சிங் பேடி கூறினார்.

"மீட்­புப் பணி­க­ளுக்­காக 53 பட­கு­கள் தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்டு உள்­ளன. தாழ்­வான பகு­தி­களில் தேங்­கி­யுள்ள வெள்­ள­நீரை வெளி­யேற்ற 570 'மோட்­டார் பம்பு' களுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!