சுயமாக கொவிட்-19 தொற்றுப் பரிசோதனை செய்துகொள்வது மலேசிய மக்களிடையே அதிகரித்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் மலேசிய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒன்றுகூடல்களுக்குச் செல்லும் முன்னர் தங்களைத் தாங்களே பரிசோதித்துக்கொள்வது அங்கு அதிகரித்து வருகிறது.
கொரோனா கிருமியுடன் வாழும் கட்டத்தை நோக்கிப் பயணம் செய்யும் மலேசியா, சுயபரிசோதனைக் கருவியை சிரமமின்றி பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
குறிப்பாக, 'ஏஆர்டி' எனப்படும் விரைவுப் பரிசோதனைக் கருவியின் விலை சில மாதங்களுக்கு முன்னர் 39.90 ரிங்கிட்டாக இருந்தது. மேலும் குறிப்பிட்ட மருந்தகங்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு மற்றுமே அவற்றை விநியோகிக்கும் உரிமை தரப்பட்டிருந்தது.
ஆனால் அந்த நிலைமை மாறி விட்டது. நவம்பர் 1 முதல் சுய
பரிசோதனைக் கருவி ஒவ்வொன் றின் சில்லறை விலையும் 6.90 ரிங்கிட்டாகக் குறைந்துவிட்டது. 2,570 வர்த்தக நிறுவனங்களுக்கு இதனை விற்க அனுமதி தரப்பட்டுள்ளது.