டென்மார்க் செல்லும் சிங்கப்பூர் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் விதிமுறை

டென்மார்க் செல்லும் சிங்கப்பூர் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் விதிமுறை

1 mins read
7f564545-2628-4d64-abe7-7580a51e6cbf
டென்மார்க்கின் கோபன்ஹேகன் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் விமானங்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரை கொவிட்-19 தொற்று அபாயம் அதிகமுள்ள நாடாக வகைப்படுத்தியுள்ளது டென்மார்க்.

தனால், சிங்கப்பூரிலிருந்து டென்மார்க் செல்லும் சிங்கப்பூர்வாசிகள் அங்கு சென்று இறங்கியதும் தங்களை 10 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் உள்ள டென்மார்க் தூதரகம் இன்று (நவம்பர் 11) அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்தது.

பயணிகள் டென்மார்க் சென்று இறங்கிய நான்காவது நாளில் எடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையில் 'தொற்று இல்லை' என உறுதியானால், தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படலாம்.

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை அண்மையில் நீக்கியது ஐரோப்பிய ஒன்றிய மன்றம்.

அதையடுத்து, டென்மார்க் செல்லும் சிங்கப்பூர் பயணிகளுக்குத் தனிமைப்படுத்தல் விதிமுறை விதிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்