‘சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையே நிலம்வழி பயணங்கள் தொடங்கக்கூடும்’

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் தடத் (விடி­எல்) திட்­டத்தை மலே­சியா சிங்­கப்­பூ­ரு­டன் இம்­மா­தம் 29ஆம் தேதி­மு­தல் தொடங்­க­வி­ருப்­ப­தாக இவ்­வா­ரம் அறி­விக்­கப்­பட்­டது. இத­னால் பய­ணம் செய்­வோ­ருக்கு இரு நாடு­களி­லும் தனிமை உத்­த­ரவு இருக்­காது. இரு நாடு­க­ளுக்­கும் இடையே பய­ணங்­க­ளைத் தொடங்­கு­வ­தன் முதல்­படி இது என்று நேற்று நடை­பெற்ற நேர்­கா­ணல் ஒன்­றில் சிங்­கப்­பூ­ருக்­கான மலே­சி­யத் தூதர் அஸ்­ஃபார் முகம்­மது முஸ்­த­ஃபார் குறிப்­பிட்­டார்.

சுகா­தா­ரம், பரி­சோ­த­னைத் திட்­டம், எல்லை தாண்­டிய செயல்­முறை­கள் போன்ற அம்­சங்­களில் இரு நாடு­களும் கவ­னம் செலுத்தி வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும், நிலம்­வ­ழி­யி­லான எல்­லை­க­ளைத் திறப்­பது 'விடி­எல்' திட்­டத்­தைக் காட்­டி­லும் சற்று சிக்­க­லா­னது என்­றார் அவர்.

கொவிட்-19க்கு முந்­திய கால­கட்­டத்­தில் தின­மும் 200,000 முதல் 300,000 பய­ணி­கள் வரை இரு நாடு­க­ளுக்­கும் இடையே பய­ணம் செய்­த­னர். இதைத் தற்­போ­தைய நிலை­யில் எதிர்­பார்க்க முடி­யாது என்று அவர் எச்­ச­ரித்­தார். ஒவ்­வொரு நாளும் பய­ணி­கள் எண்­ணிக்­கை­யில் ஒரு வரம்பு இருக்­கும் என்று அவர் தெரி­வித்­தார்.

ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்­கு­வ­ரத்து மூலம் நிலம்­வ­ழிப் பய­ணங்­கள் தொடங்க வாய்ப்­புள்­ளதா என்ற கேள்­விக்கு, எளி­தில் சமா­ளிக்­கக்­கூ­டிய நிலை அது என்று அவர் பதி­ல­ளித்­தார்.

இதற்­கி­டையே, அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளுக்கு மலே­சியா அதன் எல்­லை­களை ஜன­வரி 1ஆம் தேதிக்­குள் திறந்­தி­டும் என்று அந்­நாட்டு அர­சாங்க ஆலோ­சனை மன்­றம் தெரி­வித்­துள்­ளது. இதன் மூலம் நலிந்­து­போன நாட்­டின் சுற்­றுப்­ப­ய­ணத்­துறை மீளும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மலே­சி­யப் பொரு­ளி­யல் மீட்­சித் திட்­டத்­தைக் கையா­ளும் மன்­றத்­திற்கு முன்­னாள் மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் தலை­வ­ராக உள்­ளார். கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் போன்ற தொற்­றுக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளு­டன் எந்த நாட்­டி­லி­ருந்து பய­ணி­கள் வரு­கின்­ற­னர் என்­ப­தைப் பொறுத்து மலே­சி­யா­வுக்­குள் அனு­ம­திக்­கப்­படு­வர் என்­றார் திரு முகை­தீன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!