தடுப்பூசி போடாத கொவிட்-19 நோயாளிகளுக்கு அதிக செலவு

தடுப்பூசி போடாத கொவிட்-19 நோயாளிகளுக்கு அதிக செலவு

1 mins read

கொவிட்-19க்கு எதி­ராக தடுப்­பூசி போட்­டி­ரா­தோர், தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டால், $25,000 மருத்­து­வக் கட்­ட­ணத்தை எதிர்­நோக்­கக்­கூ­டும். ஆனால், கட்­ட­ணக் கழிவு மற்­றும் காப்­பு­றுதி பொருந்­தி­னால், மருத்­து­வக் கட்­ட­ணம் கணி­ச­மா­கக் குறை­யும் என்று சுகா­தார அமைச்சு கூறியுள்­ளது.

தீவிர சிகிச்­சைப் பிரி­வி­லும் கொவிட்-19 தொடர்­பாக இதர சிகிச்­சை­யும் தேவைப்­ப­டு­வோ­ருக்­கான இடை­நிலை மருத்­து­வ­ம­னைக் கட்­ட­ணம் $25,000. அரசாங்க மானி­யம், மெடி­ஷீல்டு லைஃப் காப்­பு­றுதி மூலம், தகு­தி­யு­டைய சிங்­கப்­பூ­ரர்­களுக்­குக் கட்­ட­ணம் $2,000 முதல் $4,000ஆகக் குறை­யும்.

தங்­க­ளது மெடி­சேவ் கணக்­கி­லி­ருந்து எஞ்­சிய தொகையை நோயா­ளி­கள் செலுத்­த­லாம்.

நோயா­ளி­யின் மருத்­துவ நிலை­யின் தீவி­ரத்­தை­யும் அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கும் இடத்­தை­யும் பொறுத்து, மருத்­து­வக் கட்­ட­ணம் வேறு­படும் என்று அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் சொன்­னார்.

தடுப்­பூசி போட்­டி­ரா­தோரை கொவிட்-19 தொற்­றி­னால், டிசம்­பர் 8ஆம் தேதி­யி­லி­ருந்து மருத்­து­வக் கட்­ட­ணத்தை அவர்­களே ஏற்க வேண்­டும் என்று அர­சாங்­கம் அண்­மை­யில் அறி­வித்­தி­ருந்­தது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளத் தகு­தி­பெற்­றும், தடுப்பூசி விரும்­பா­தோரே, தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­படும் கொவிட்-19 நோயாளி­களில் பெரும்­ப­கு­தி­யி­ன­ராக உள்­ள­னர். ஒரு­முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அவ­கா­சம் வழங்­கும் நோக்­கில், டிசம்­பர் 31ஆம் தேதி­வரை அவர்­க­ளுக்கு மருத்­து­வ­ம­னைக் கட்­ட­ணம் விதிக்­கப்­ப­டாது.