70 மீட்டர் உயரத்தில் சிக்கிய ஊழியர் மீட்பு

70 மீட்டர் உயரத்தில் சிக்கிய ஊழியர் மீட்பு

1 mins read
4360b646-87f1-422b-a2fe-80b5743ed4ab
ஊழியரை படுக்கையில் வைத்து கீழே கொண்டு வரும் சிறப்பு மீட்பாளர்கள். படம்: குடிமைத் தற்காப்புப் படை/ ஃபேஸ்புக் -

எழு­பது மீட்­டர் உய­ரத்­தில் பாரந்­தூக்­கி­யில் சிக்­கிக்கொண்­டி­ருந்த ஊழி­யரை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை பாது­காப்­பாக மீட்டு உள்­ளது. பீச் ரோட்­டில் உள்ள கட்டு மானத் தளத்­தில் வெள்­ளிக்­கி­ழமை மாலை 8.45 மணி­ய­ள­வில் பாரந்­தூக்­கி­யில் ஊழி­யர் ஒரு­வர் சிக்­கிக் கொண்­டார். காலில் காய­ம­டைந்­த­தால் அவ­ரால் கீழே இறங்க முடி­ய­வில்லை.

தக­வ­ல­றிந்து அங்கு வந்த குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் அவ­சர மருத்­துவ உதவி பயிற்சி பெற்­ற­வர் உட்­பட இரண்டு தீ அணைப்­பா­ளர்­கள் பாரந்­தூக்­கி­யில் ஏறி உச்­சத்தை அடைந்­த­னர். ஊழி­ய­ரின் காலில் கட்­டுப்­போட்டு ஊழியரை அசை­யா­மல் படுக்க வைத்­த­னர்.

பின்­னர் பேரி­டர் உதவி, மீட்­புக்­கு­ழு­வி­னர் மேலே ஏறி ஊழியரை தூக்­குப்­ப­டுக்­கை­யில் வைத்து அந்­த­ரத்­தில் தொங்­கி­ய­படி அவரைக் கீழே இறக்­கி­னர். சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் ஊழி­யர் சேர்க்­கப்­பட்­டார். ஊழி­யர் எப்­படி காயம் அடைந்­தார் என்­பது குறித்து விவ­ர­மில்லை.