சுமார் 200 நாடுகள் பங்ேகற்கும் கிளாஸ்கோ 'சிஓபி26' பருவநிலை மாநாட்டில் பல மணி நேர விவாதத் திற்குப் பிறகு இறுதி முடிவை எட்டு வதில் தாமதம் ஏற்பட்டது.
பருவநிலை மாற்றத்தால் பெருகும் நிதி இழப்புகளைச் சந்திக்கும் வளரும் நாடுகளுக்கு உதவ பணக்கார நாடுகள் மறுத்துவருகின்றன.
உலக வெப்பநிலை மேலும் 1.5லிருந்து 2 டிகிரி சென்டிகிரேடு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் பாரிஸ் உடன்பாட்டின் இலக்கை எவ்வாறு நிறைவேற்றுவது என் பதிலும் நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஆண்டுக்கு 100 பில்லியன் யுஎஸ் டாலர் நிதி உதவியை வழங்கு வதாக உறுதி கூறிய பணக்கார நாடுகள் தற்போது பின்வாங்கு கின்றன.
இதையடுத்து நேற்று புதிய நகல் திட்டம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இறுதி அறிக்கை பின்னேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.