நீரிழிவுப் போராட்டத்தில் சிங்கப்பூர் முன்னேற்றம்

நீரிழிவுப் போராட்டத்தில் சிங்கப்பூர் முன்னேற்றம்

2 mins read

உடற்பருமன், உடற்பயிற்சியின்மைக்கு இன்னும் தீர்வில்லை: ஓங்

நீரி­ழி­வுக்கு எதி­ரான போராட்­டத்­தில் சிங்­கப்­பூர் கணிசமான முன்­னேற்­றம் கண்டு வந்­த­போ­தி­லும் உடற்பருமன் மற்­றும் குறை­வான நட­மாட்­டம் போன்­றவை இன்­னும் தீராத பிரச்­சி­னை­க­ளாக நீடிப்­

ப­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரிவித்துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் எல்­லாப் பிரி­வி­ன­ரி­டத்­தி­லும் காணப்­படும் உடற்­பரு­மன் 2017ஆம் ஆண்­டில் 8.6 விழுக்­கா­டாக இருந்த நிலை­யில் கடந்த ஆண்டு அது 10.5 விழுக்­கா­டாக அதி­க­ரித்­து­விட்­டது என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரர்­கள் நாள் ஒன்­றுக்கு சரா­ச­ரி­யாக 12 தேக்­

க­ரண்டி சர்க்­கரை உட்­கொள்­ளு­

வ­தா­க­வும் ஆரோக்­கிய அள­வைக் காட்­டி­லும் இது மிக­வும் அதி­கம் என்­றும் 2018/2019 தேசிய ஊட்­டச் சத்­து­ணவு ஆய்­வ­றிக்­கையை மேற்­கோள் காட்டி திரு ஓங் குறிப்­பிட்­டார்.

கடந்த ஆண்டு 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தாள் வெளியிட்ட தக­வல்­படி, ஆண்­டு­தோ­றும் சுமார் 19,000 பேர் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

கடந்த 2017ஆம் ஆண்டு பிர­த­மர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேர­ணியில் உரை­யாற்­றி­ய­போது நீரி­ழி­வுக்கு எதி­ரான போராட்­டம் சிங்­கப்­பூ­ரின் எதிர்­கால நலனை நோக்­கிய நீண்­ட­கா­லப் பிரச்சினை என்று கூறி­யி­ருந்­தார்.

திரு ஓங் நேற்று பேசும்­போது சிங்­கப்­பூ­ர­ரின் வாழ்க்­கைப்­பா­ணி­யில் கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­ட­தா­கக் கூறி­னார்.

"சில சிங்­கப்­பூ­ரர்­கள் சமூக நட­வ­டிக்­கை­களில் இருந்து ஒதுங்கி இருக்­கி­றார்­கள், மேலும் சில­ரது வாழ்க்கை நடை­முறை அதிக உட­லு­ழைப்பு இல்­லா­த­தாக மாறி­விட்­டது.

"இந்­தப் போக்கு நீரி­ழி­வுக்கு எதி­ரான நமது போராட்­டத்­தில் முட்­டுக்­கட்­டையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது. மேலும், ஏற்­கெ­னவே நாம் கண்ட பலனை மாற்­றி­

ய­மைக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

"இதில் மேலும் ஒரு சிக்­க­லாக கொவிட்-19 வந்­துள்­ளது. நோய்த்­தொற்­று­டன் வாழவேண்­டிய நிலை உள்­ள­தால் நீரி­ழிவை முறி­ய­டிப்­

ப­தில் சுணக்­கம் ஏற்­ப­டக்­கூ­டும்," என்­றார் அமைச்­சர் ஓங்.

உலக நீரி­ழிவு தினத்­தை­யொட்டி 'சிங்­கப்­பூர் நீரி­ழிவு' என்­னும் அற­நி­று­வன அமைப்பு ஏற்­பாடு செய்த நிகழ்ச்சி ஒன்­றில் உரை­யாற்­றிய திரு ஓங், நீரி­ழிவு நோய் உள்­ளோர் கொவிட்-19 நோய்த்தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­படும் ஆபத்து இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.