இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆயுதம் தாங்கிய சண்டையில் 26 மாவோயிஸ்டு கள் கொல்லப்பட்டனர். அந்த மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தின் கிழக்குப் பகுதி யிலுள்ள மார்டிண்டோலா வனப்பகுதியில் காவல்துறை யினருக்கும் மாவோயிஸ்ட் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் நடை பெற்றது. காவல்துறை கூடு தல் கண்காணிப்பாளர் சவுமியா முண்டே தலைமை யில் 500க்கும் மேற்பட்ட அதி ரடிப் படை வீரர்கள் காலை
6 மணி முதல் மாவோயிஸ்டு களைத் தேடி வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது சண்டை மூண்டதாக இந்திய ஊடகங் கள் கூறின. காவல்துறையின ரின் சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் தரப்பில் 26 பேர் மாண்டனர்.
மாவோயிஸ்ட் படையின் முக்கிய தலைவர் மிலின்ட் டெல்டும்டே கொல்லப்பட்டோ ரில் குறிப்பிடத்தகுந்தவர். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தாக்குதலில் ஈடுபட்டு வந்த இவரது தலைக்கு 50 லட்சம் ரூபாய் விலை நிர்ணயிக்கப் பட்டிருந்தது. மாலை 4 மணி வரை நீடித்த சண்டையில் காவல் துறை தரப்பில் நான்கு பேர் காயமடைந்தனர். அண்மைக் காலங்களில் நிகழ்ந்த ஆகப்பெரிய 'என்கவுண்டர்' தாக்குதல் இது. சண்டை நிகழ்ந்த இடம் மும்பையில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மாவோயிஸ்ட்டுகள் சுட்டுவீழ்த்தப்பட்ட பின்னர் அவர்கள் பயன்படுத்திய 29 வித ஆயுதங்களை காவல் துறையினர் கைப்பற்றினர். ஏகே 47 துப்பாக்கி மற்றும் இயந்திரத் தாக்குதல் ஆயுதங்கள் போன்றவை அவற்றுள் அடங்கும் என காவல்துறையினர் கூறினர்.