சிங்கப்பூரில் நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 15) 2,069 பேருக்குப் புதிதாக கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பதிவான எண்ணிக்கையைவிட இது சற்று அதிகம். ஞாயிற்றுக்கிழமை 1,723 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
சமூகத்தில் 1,964 பேரும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் 0.94ஆகக் குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை அது 0.97ஆக இருந்தது.
இதற்கிடையே, தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மேலும் எண்மர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்கள் 71 முதல் 96 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன.