இந்தியாவுடன் பயண ஏற்பாடு: சிங்கப்பூரர்கள் வரவேற்பு உறவுகளும் பொருளியலும் மேம்படும் என நம்பிக்கை

கி. ஜனார்த்­த­னன்

தடுப்­பூசி போட்­டு­கொண்­டோ­ருக்­கான பய­ணத் தடத் (விடி­எல்) திட்­டத்தை இந்­தி­யா­வுக்­கும் சிங்­கப்­பூர் நீட்­டித்­தி­ருப்­ப­தைச் சிறிய, நடுத்­தர வர்த்­த­கர்­கள், சுற்­றுப்­ப­ய­ணி­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் முதல் குடும்­பத்­தி­னர்­வரை அனைத்­துத் தரப்­பி­ன­ரும் வர­வேற்­றுள்­ள­னர்.

இம்­மா­தம் 29ஆம் தேதி முதல் இந்­தியா, இந்­தோ­னீ­சியா நாடு­களு­ட­னான விடி­எல் திட்­டத்­தைச் சிங்­கப்­பூர் தொடங்­கு­கிறது.

சிங்­கப்­பூர், மலே­சியா உள்­ளிட்ட 99 நாடு­க­ளி­லி­ருந்து முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள பய­ணி­களை வர­வேற்­ப­தற்­காக இந்­தி­யா­வும் தனது கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் தமிழ் முர­சி­டம் பேசிய வர்த்­த­கத் தலை­வர்­கள், சிங்­கப்­பூர்-இந்­தியா எல்­லைத் திறப்பு பொரு­ளி­யல் மேம்­பாட்­டுக்­குப் பெரி­தும் கைகொ­டுக்­கும் என நம்­பிக்கை தெரி­வித்­த­னர். சிங்­கப்­பூரின் வர்த்­த­கங்­க­ளைப் பெரி­தும் பாதித்­துள்ள ஊழி­யர் பற்­றாக்­குறை பிரச்­சினை தீரும் நேரம் நெருங்­கி­விட்­ட­தாக சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக சம்­மே­ள­னத் தலை­வர் டாக்­டர் டி சந்­துரு தெரி­வித்­தார்.

"இந்­திய சுற்­றுப்­ப­ய­ணி­கள் வரு­கை­யால் இங்­குள்ள வர்த்­த­கங்­கள், குறிப்­பாக லிட்­டில் இந்­தியா வர்த்­த­கங்­க­ளின் வியா­பா­ரம் மேம்­படும்," என்று அவர் கூறி­னார்.

பய­ணங்­க­ளுக்­கான

முன்­ப­தி­வு­களில் அதி­க­ரிப்பு

திட்­டம் குறித்து திங்­கட்­கி­ழமை அறி­விக்­கப்­பட்ட ஒரே நாளில் இந்­தி­யச் சுற்­றுப்­ப­ய­ணங்­க­ளுக்­கான முன்­ப­தி­வு­களில் 30% அதி­க­ரிப்பு இருந்­த­தாக பயண முக­வர் ராஜ்­கு­மார் கூறி­னார்.

விடு­மு­றைக் காலத்­தில் விடி­எல் திட்­டம் துவங்­கப்­ப­டு­வது மிக­வும் வச­தி­யாக இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

பய­ணங்­க­ளுக்­கான முன்­ப­திவு தமக்கு ஒரே நாளில் 70% அதி­கரித்­த­தா­கக் குறிப்­பிட்ட மற்­றொரு பயண முக­வர் சர­வ­ணன், அடுத்த சில நாட்­களில் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமான நிறு­வ­னம் இந்­திய விமா­னப் பய­ணங்­க­ளின் ஏற்­பாடு பற்­றித் தெரி­விக்­கும் என எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறி­னார்.

'சரக்­கு­க­ளின் இறக்­கு­மதி

செலவு குறை­யக்­கூ­டும்'

'தி சென்னை டிரே­டிங்' மொத்த விற்­பனை நிறு­வ­னத்­தின் தலை­வர் டி மூர்த்தி, "சரக்கு விமா­னங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தால் பொருட்­களை இங்கு இறக்­கு­மதி செய்­யும் செலவு குறை­யும்," என்­றார். காய்­க­றி­க­ளின் விலை, கிலோ இரண்டு வெள்­ளிக்கு மேல் குறைய வாய்ப்பு உள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் மருந்­த­கப் பொருட்­களில் கணி­ச­மான அளவு இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படு­வ­தாக சிங்­கப்­பூர் உற்­பத்­தி­யாளர் சங்­கத்­தின் உயிர் அறி­வி­யல் பிரி­வுத் தலை­வர் மோகன் குமார் தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரின் மருந்­தக வர்த்­த­கப் பிரி­வி­னர் அடிக்­கடி இந்­தியா செல்­வ­தால் இத்­திட்­டம் சிறந்­தது. எனி­னும், பெங்­க­ளூ­ரு­ட­னான பய­ணத்­த­டத் திட்­டம் மேலும் வச­தி­யாக இருக்­கும். பெங்­க­ளூர் இந்­தி­யா­வின் முக்­கிய உற்­பத்தி மையங்­களில் ஒன்று என்­றார் அவர்.

குடும்­பத்­தி­ன­ரைச் சந்­திக்க

முடி­யும் என்ற மகிழ்ச்சி

சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும், வசிக்­கும் இந்­திய நாட்­ட­வர்­க­ளுக்­கும் இந்­தி­யா­வில் உற­வி­னர்­க­ளைக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்­கும் இரு­நா­டு­களும் எல்­லை­க­ளைத் திறந்­தி­ருப்­ப­தில் பெரும் நிம்­ம­தி­யும் மகிழ்ச்­சி­யும் ஏற்­பட்­டுள்­ளது.

"சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வின் வெவ்­வேறு நக­ரங்­க­ளுக்­கும் இடையே மேலும் அதி­க­மான விடி­எல் திட்­டங்­களை ஏற்­ப­டுத்­தித் தந்­தால் நம் ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து நேரடி விமா­னப் பய­ணம் மூலம் அந்­தந்­தப் பகு­தி­களை அடைந்­து­வி­ட­லாம். தொற்று அபா­யத்­தைக் குறைத்­துக்­கொள்­ள­லாம்," என்­றார் 'பில்­டிங் புரொ­டக்ஸ் & கன்ஸ்ட்­ரக்­‌ஷன் மெட்­டீ­ரி­யல்ஸ் இன்­டஸ்ட்ரி குரூப்' நிர்­வாக இயக்­கு­நர் திரு பெஞ்­ச­மின் லிம்.

இந்­தி­யா­வு­ட­னான விடி­எல் திட்­டம் குறித்­துக் கேள்­விப்­பட்­ட­தும் தாம் மகிழ்ந்­த­தா­கக் குறிப்­பிட்­டார் கட்­டு­மான ஊழி­யர் ஜெய­சீ­லன். தம்­மு­டைய குடும்­பத்­தி­ன­ரைக் காண இந்­தியா செல்­லும் எண்­ணம் இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

இரு நாடு­க­ளுக்­கு­மி­டையே பய­ணங்­கள் அதி­க­ரிப்­பது பொரு­ளி­ய­லுக்கு நல்­லது என்­றா­லும் கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை இத­னால் வெகு­வாக உய­ரக்­கூ­டாது என்று இல்­லத்­த­ரசி திரு­வாட்டி அகிலா, 40, கூறி­னார்.

இம்­மா­தம் 12ஆம் தேதி முதல் சிங்­கப்­பூர் வெளி­யி­டும் தடுப்­பூ­சிச் சான்­றி­தழ்­களை இந்­தியா அங்­கீ­கரிக்­கத் தொடங்­கி­யுள்­ள­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!