ரோச்சோரில் 960 முதன்மை வட்டார 'பிடிஓ' வீடுகள்

ரோச்சோரில் 960 முதன்மை வட்டார 'பிடிஓ' வீடுகள்

1 mins read
b6a758f7-c90c-4027-922e-9320fb112962
புதிய முதன்மை வட்டார வீட்டுத் திட்டத்தின்கீழ், ரோச்சோர் பகுதியில் 960 வீடுகள் கட்டப்படும். படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் -
Google News Preferred Icon

தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) 4,501 வீடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இன்று (நவம்பர் 17) விற்பனைக்கு விட்டது.

புதிய முதன்மை வட்டார வீட்டுத் திட்டத்தின்கீழ், ரோச்சோர் பகுதியில் 960 வீடுகள் கட்டப்படும் என்று கழகம் அறிவித்துள்ளது.

இந்த முதன்மை வட்டார வீட்டுத் திட்டத்தின்கீழ் வீடுகளை வாங்குவோர் அவற்றை விற்கும்போது அதன் விற்பனை விலையிலோ அந்த வீடுகளின் விலை மதிப்பிலோ, 6% தொகையை, இரண்டில் எது அதிகமோ அதை, கழகத்துக்கு திருப்பித் தரவேண்டும்.

இந்த வீடுகள் அனைத்தும் ஆறு குடியிருப்புப் பேட்டைகளில் கட்டப்படும். இந்த வீடுகள் கட்டி முடிக்க ஏறக்குறைய நாலரை ஆண்டுகள் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவற்றுடன், எற்கெனவே விற்பனைக்கு விடப்பட்ட, ஆனால் விற்கப்படாத, 1,798 வீடுகளும் விற்பனைக்கு விடப்பட்டன.