காற்றின் தரம் நேற்று ஐந்தாவது நாளாக மோசமடைந்ததைத் தொடர்ந்து டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இவற்றில் சில நவம்பர் 21ஆம் தேதி வரையிலும் மேலும் சில மாத இறுதிவரையிலும் நடப்பில் இருக்கும்.
டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவிலான வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைக் கழிவு, பயிர்க்கழிவுகள் எரிப்பு போன்றவை காரணமாக கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதை
யடுத்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தலைமையில் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்படவேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று பிற்பக லில் செய்தியாளர்களிடம் பேசினார்.
"கட்டுமானப் பணிகள், கல்லூரிகள், பள்ளிகள், நூலகங்கள், பயிற்சி மையங்கள் போன்றவை இயங்கக் காலவரம்பற்ற தடை விதிக்கப்படுகிறது. அரசு அலுவலகப் பணியாளர்கள் 100% வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்.
"அத்தியாவசியத் தேவைகள் தவிர பிற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. பொதுப் போக்கு வரத்தை அதிகரிக்க 1,000 தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் இயக்கப்படும். டெல்லியிலுள்ள ஆறு நீர்மின் நிலையங்கள் இம்மாதம் இறுதிவரை மூடப்படும்.
"10 ஆண்டு பழைய டீசல் வாகனங்கள், 15 ஆண்டு பழைய பெட்ரோல் வாகனங்கள் சாலைகளில் இயங்குவதைத் தடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 372 தண்ணீர் இயந்திரங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்படு கிறது," என்று அவர் தெரிவித்தார்.