வாராந்திர கிருமித்தொற்று விகிதம் கூடுவதால் மலேசியாவில் கவலை

தேசிய அள­வி­லான கொவிட்-19 கிரு­மித்­தொற்று விகி­தம் அதி­க­ரித்து வரு­வ­தன் தொடர்­பில் மலே­சிய சுகா­தாரத் துறை கவலை தெரி­ வித்துள்­ளது. இது தொடர்­பாக அந் நாட்டின் சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார்.

"நவம்­பர் 7 தொடங்கி நவம்­பர் 13 வரை நீடித்த 45வது தொற்­று­நோ­யி­யல் வாரத்தில் சரா­சரி கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை, தொற்று மர­ணங்­கள் மற்­றும் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட் டோரின் எண்­ணிக்கை குறைந்­த­போதி­லும் தேசிய அள­வி­லான தொற்றுப் பரவல் விகி­தம் 1.05 ஆக உள்­ளது. இது நோய்த்­தொற்று அதி­க­ரிப்­ப­தையே உணர்த்­து­கிறது.

"இந்த விகி­தம் 1க்கும் கீழ் இருந்­தால் தொற்று குறைந்து வரு­வ­தா­கப் பொருள்.

"நிலை­மை கவ­லைக்­கு­ரி­ய­தா­கத் தொடர்­கிறது. முந்­திய வாரத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், புதிய தொற்­று­

க­ளின் எண்­ணிக்­கை­யும் தொற்று பரவல் விகி­த­மும் அதி­க­ரித்துள்­ளன.

"சமூக அள­வில் தொற்று பர­வும் அபா­யத்­தை­யும் கிரு­மித்தொற்­றால் மேலும் பலர் பாதிக்­கப்­படும் நிலை­யை­யும் இது உணர்த்­து­கிறது.

"எனவே பொது­மக்­கள் அலட்­சி­ய­மாக இருக்­கக்கூடாது. தொற்­றுப் பர­வலை உட­ன­டி­யா­கக் குறைப்­ பதற்காக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை அனை­வ­ரும் கடைப்­பி­டிக்க வேண்­டும்," என்று அவர் கூறி­யுள்­ளார்.

இந்த 45வது வாரத்­தில் வேலை­யிடத் தொற்­றுக் குழு­மமும் கல்வி நிலை­யங்­க­ளின் தொற்­றுக் குழு­மமும் அதி­க­ரித்துள்­ளன. முந்­திய வாரத்­தில் அத்­த­கைய தொற்­றுக் குழு­மங்­கள் குறைவாக இருந்தன.

குறிப்­பாக 37வது தொற்­று

­நோ­யி­யல் வாரத்­தில் குைறந்­தி­ருந்த தொற்­றுக் குழு­மங்­கள், மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான நட­மாட்­டம் மீண்ட பிற­கும் நான்கு மாநி­லங்­களில் தேசிய மீட்­புத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக பொரு­ளி­யல் துறை திறக்­கப்­பட்ட பிற­கும் மீண்டும் அதி­க­ரித்துள்­ள­தாக திரு நூர் ஹிஷாம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!