கொவிட்-19 : மேலும் எழுவர் மரணம்

கொவிட்-19 : மேலும் எழுவர் மரணம்

1 mins read
643ca82d-086b-45e7-811e-761057f0e8db
-

சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பிரிவின் ஒட்டுமொத்த பயன்பாட்டு விகிதம் 62.6 விழுக்காட்டுக்கு குறைந்தது. இது, செவ்வாய்க்கிழமையின் விகிதமான 63.3 விழுக்காட்டைக் காட்டிலும் குறைவு என்று சுகாதார அமைச்சு, நேற்றிரவு வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 3,474 கொவிட்-19 கிருமித்தொற்றுகள் பதிவானதாக சுகாதார அமைச்சு தனது அன்றாட கொவிட்-19 அறிக்கையில் குறிப்பிட்டது. இந்த தினசரி எண்ணிக்கை முன்னதாக 2,069 இருந்தது. அத்துடன், 47 வயதுக்கும் 83 வயதுக்கும் இடையே ஏழு பேர், கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதனுடன், சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 619க்கு உயர்ந்தது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் 3,320 பேருக்கு சமூகத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டது. 144 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள். 10 பேர் வெளிநாடுகளில் கிருமி தொற்றியவர்கள்.