சிங்கப்பூர்-மலேசிய எல்லைகள் விரைவில் திறப்பு; பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே தரைவழி எல்­லை­கள் விரை­வில் திறக்­கப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்படு­கிறது.

இதற்­கான பேச்­சு­வார்த்­தை­யில் நல்ல முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் சிங்­கப்­பூர் வர்த்­தக, தொழில் அமைச்சு தெரி­வித்­தது.

“தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்­கான இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான ‘விடி­எல்’ பய­ணம் இறுதி வடி­வம் பெற்று வரு­கிறது. இரு நாடு­களில் உள்ள பல ஊழி­யர்­கள் பல மாதங்­க­ளாக குடும்­பத்­தைப் பிரிந்து உள்­ள­னர். குடும்­பத்­து­டன் அவர்­கள் ஒன்­று­சேர முன்­னு­ரிமை வழங்­கப்­படும்,” என்று அமைச்சு கூறி­யது.

ஆனால் சிங்­கப்­பூர்-மலே­சிய எல்­லை­கள் திறக்­கப்­படும் தேதியை அது தெரி­விக்­க­வில்லை.

இம்­மா­தம் 29ஆம் தேதி சிங்­கப்­பூர்-மலே­சிய தரைவழி எல்­லை­கள் திறக்­கப்­படும் என்று மலே­சிய ஊட­கங்­களில் தக­வல் வெளி­யா­ன­தைத் தொடர்ந்து அமைச்­சின் அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

இதற்­கி­டையே ஏர்­ஏ­ஷியா, ஜெட்ஸ்­டார் ஏஷியா, மலே­சிய ஏர்­லைன்ஸ், மலிண்டோ ஏர், ஸ்கூட் மற்­றும் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் ஆகிய ஆறு விமான நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூர்-மலே­சியா விமா­னச் சேவையை வழங்­க­வி­ருக்­கின்­றன.

இதனை தெரி­வித்த சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், இம்­மா­தம் 22ஆம் தேதி­யி­லி­ருந்து ‘விடி­எல்’ எனும் தடுப்­பூசி போட்­டோ­ருக்­கான தடத்­தின் கீழ் பய­ணி­கள் விண்­ணப்­பிக்­க­லாம் என்று கூறி­யது.

இந்நிலையில் ஜோகூர் பாலம் அல்­லது துவாஸ் 2வது பாலம் வழி­யாக சிங்­கப்­பூர்-மலே­சிய தரை வழிப் பய­ணமும் விரைவில் அனு மதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!