கொவிட்-19: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் விகிதம் இறங்குமுகம்

கொவிட்-19: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் விகிதம் இறங்குமுகம்

1 mins read
3caf4115-258c-4ddd-a77b-5b11e5275705
-

சிங்கப்பூரில் 2,038 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு வியாழக்கிழமை (நவம்பர் 18) தெரிவித்தது.

நேற்று முன்தினம் புதன்கிழமை அந்த எண்ணிக்கை 3,474ஆக இருந்தது.

கொவிட்-19 வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் 0.90ஆக இருந்தது. புதன்கிழமை அது 0.89ஆக இருந்தது.

கடந்த இரு வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் விகிதம் குறைந்து வருகிறது. நேற்று வியாழக்கிழமை அது 58.8 விழுக்காடாக இருந்தது. புதன்கிழமை அந்த விகிதம் 62.6 விழுக்காடாக இருந்தது. இந்த மாதம் 4ஆம் தேதி அது 70.2 விழுக்காடாக இருந்தது.

இதற்கிடையே, கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மேலும் அறுவர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் 57 முதல் 84 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன.