சிங்கப்பூர்-மலேசியா விமானப் பயணம்: கவனத்தில் கொள்ளவேண்டியவை

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை முற்றிலும் போட்டுக்கொண்டோர் நவம்பர் 29 முதல் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் விமானப் பயணங்களை மேற்கொள்ளலாம். அவர்களுக்கு தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படாது.

இந்தப் பயண ஏற்பாட்டின்கீழ், மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால் ஒருவர் முற்றிலும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். என்றாலும், 12க்கும் குறைந்த வயதுள்ள சிறார்களுக்கு விதிவிலக்கு உண்டு.

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்து உள்ள தடுப்பூசி மருந்தை மலேசியாவும் அங்கீகரித்து உள்ளது. மலேசியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பாக ஒருவர் சிங்கப்பூரிலோ அல்லது மலேசியாவிலோ தொடர்ந்து 14 நாட்கள் இருந்து வந்திருக்கவேண்டும்.

இந்த ஏற்பாட்டின்கீழ், மலேசியா செல்ல விண்ணப்பம் தேவையில்லை. இருந்தாலும் மலேசியா புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குள் பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியதும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள நீங்கள் உங்களைப் பதிந்துகொண்டு அதற்கான தொகையைச் செலுத்த வேண்டும்.

குறுகியகால பயணம் மேற்கொள்வோர், இருவழி பயணச் சீட்டில் பயணம் மேற்கொள்ள வேண்டும். கொவிட்-19 தொடர்பான சிகிச்சைகளுக்காக குறைந்தபட்சம் 100,000 ரிங்கிட் ($32,500) பயணக் காப்புறுதி கட்டாயம்.

தடமறிவதற்கு வசதியாக MySejahtera செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் உங்களைப் பதிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் பயண ஏற்பாட்டின்கீழ், அன்றாடம் ஆறு விமானச் சேவைகள் இரு வழிகளிலும் இடம்பெறும்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், ஏர்ஏஷியா, ஜெட்ஸ்டார் ஏஷியா, மலேசியா ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர் ஆகிய நிறுவனங்கள் விமானச் சேவையை வழங்கும்.

மலேசியாவுக்குப் புறப்படும்போது சாங்கி விமான நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயண பத்திரம், செல்லுபடியாகக்கூடிய தடுப்பூசிச் சான்றிதழ், கொவிட்-19 பரிசோதனை முடிவு, MySejahtera செயலியுடன் கூடிய கைபேசி ஆகியவற்றை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.

கோலாலம்பூரில் தரையிறங்கும்போது கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

முடிவு வர 3 மணி நேரம் ஆகலாம். அதுவரை அங்கு காத்திருக்கவேண்டும். தொற்று இல்லை என்றால் குடிநுழைவு முகப்புக்குச் சென்று ஆவணங்களைத் தாக்கல் செய்யவேண்டும்.

மலேசியாவில் இருக்கையில் பொதுச் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும். எப்போதுமே உங்கள் கைபேசியில் MySejahtera செயலி செயல்படும் நிலையில் இருக்கவேண்டும்.

கொவிட்-19 தொற்று ஏற்பட்டால் செலவை நீங்கள்தான் ஏற்கவேண்டும். தொற்று விவரங்களைச் செயலியில் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!