தனிமைப்படுத்த தேவையில்லாத் திட்டத்தின்கீழ் பயணம் செய்ய அடுத்த ஆண்டிலிருந்து பயணி
களுக்குக் கூடுதல் தெரிவுகள் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதியிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தட ஏற்
பாட்டின்கீழ் சிங்கப்பூர்
ஏர்லைன்ஸ் கூடுதல் விமானச் சேவைகளை வழங்க இருக்கிறது.
ஆம்ஸ்டர்டாம், பார்சிலோனா, கோபன்ஹேகன், ஃபிராங்ஃபர்ட், லண்டன், மிலான், மியூனிக், நியூயார்க், பாரிஸ், ரோம், சியேட்டல், வேன்கூவர் ஆகிய நகரங்களிலிருந்து விமானச் சேவைகள் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேற்று தெரிவித்தது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி முதல் ஹியூஸ்டன், மான்செஸ்டர் ஆகிய நகரங்களிலிருந்தும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவைகள் வழங்க இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து மலேசியத் தலை
நகர் கோலாலம்பூரிலிருந்து விமானச் சேவைகளைத் தொடங்க இருப்பதாக அது ஏற்கெனவே அறிவித்திருந்தது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் அடுத்த மாதம் 6ஆம் தேதிக்குள் மொத்தம் 21 நாடு
களிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவைகள் வழங்கும்.
இம்மாதம் 29ஆம் தேதி முதல் இந்தோனீசியாவிலிருந்து வரும் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழையலாம் என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர்
எஸ். ஈஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இதே ஏற்பாடு இந்தியாவி
லிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கும் நடைமுறைப்
படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதை அடுத்து, டிசம்பர் 6ஆம் தேதியிலிருந்து கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழையலாம்.
அதுமட்டுமல்லாது, இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் சுவீடன், ஃபின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவைகளைத் தொடங்க இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத்
திட்டத்தின்கீழ் பயணம் செய்
பவர்களுக்கு இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படாது.
மாறாக, சிங்கப்பூருக்குப் புறப்பட்டு வருவதற்கு இரண்டு நாட்
களுக்கு முன்பு அவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்து கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். சிங்கப்பூருக்கு வந்ததும் அவர்களுக்கு மீண்டும் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும்.
இம்மாதம் 11ஆம் தேதியி
லிருந்து பிசிஆர் பரிசோதனை முறை அல்லது ஏஆர்டி சுய
பரிசோதனை மூலம் தங்களுக்கு கிருமித்தொற்று ஏற்படவில்லை என்பதை பயணிகள் உறுதி செய்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கலாம்.
சிங்கப்பூர் வந்ததும் அவர்
களுக்கு பிசிஆர் பரிசோதனை முறைப்படி, கொவிட்-19 பரிசோதனை செய்யப்படும். கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டதும் அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
இதற்கிடையே, தனிமைப்
படுத்த தேவையில்லாத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான விமானச் சேவைகளுக்கான பயணச்சீட்டு விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்த ஏற்பாட்டின்கீழ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகியவை விமானச் சேவைகளை வழங்குகின்றன.
பயணச்சீட்டுகளுக்கான விற்பனை நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.
நேற்று காலை 11.20 மணிக்குள் பயணச்சீட்டுகள் அதிகளவில் விற்கப்பட்டதாகவும் பல விமானங்களுக்கான பயணச்
சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான விமானச் சேவைகள் குறித்து தகவல் கேட்டு தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஸ்கூட் தெரிவித்தது.