வெள்ளக்காடாக மாறிய திருப்பதி மலை

வெள்ளக்காடாக மாறிய திருப்பதி மலை

1 mins read
f512faa8-9b92-4258-80d1-54ab172f28bd
திருப்பதி கோயில் வளாகத்துக்குள் வெள்ள நீர் புகுந்தது. படம்: இந்திய ஊடகம் -

இந்­தி­யா­வின் ஆந்­திர மாநி­லத்­தின் சித்­தூர் மாவட்­டத்­தில் இடை­

வி­டாது பெய்து வரும் மழை­யால் திருப்­பதி மலை­யில் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­கிறது.

திருப்­பதி ஏழு­ம­லை­யான் திருக்­கோ­யில் வளா­கத்­துக்­குள் வெள்ள நீர் புகுந்­துள்ள நிலையில், கோயில் அடைக்­கப்­பட்­டுள்­ளது.

கரைபுரண்டோடும் வெள்ளம் காரணமாக இறை வழி­பாட்­டுக்­காக வந்த பக்­தர்­கள் கோயி­லி­லி­ருந்து வெளி­யேற முடி­யா­மல் தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அவர்­க­ளுக்குத் தேவை­யான உணவு மற்­றும் தங்­கு­மி­டம் ஆகி­ய­வற்றை கோயில் நிர்­வா­கம் ஏற்­பாடு செய்­துள்­ளது.

திருப்­ப­தி­யில் இது­போன்ற வெள்­ளம் இதற்கு முன்பு நிகழ்ந்­த­தில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

காட்­டாறு போல பாய்ந்து சென்ற வெள்­ளத்­தில் பல வாக­னங்­கள்

அடித்­துச் செல்­லப்­பட்­டன.