மருத்துவமனைகளில் வருகையாளருக்கு அனுமதி

மருத்துவமனைகளில் வருகையாளருக்கு அனுமதி

2 mins read

மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் பரா­ம­ரிப்பு இல்­லங்­க­ளி­லும் தங்­கு­வோரை நேரில் சென்று காண கொவிட்-19 முழுமையாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்கு நாளை முதல்

அனு­மதி வழங்­கப்­படும். வரு­கை­யாளர்­கள் சென்று பார்க்­கும் நோயா­ளி­களும் முழுமையாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டிக்க வேண்டும்.

எனினும் மருத்துவ ரீதியாக தடுப்பூசி போட முடியாத நிலையில் இருப்போருக்கும் அசாதாரண சூழ் நிலையைப் பொருத்தும் விதிவிலக்கு அளிக்கப்படும் என்று சுகா­தார அமைச்சு நேற்­று அறி­வித்­தது.

"நோயா­ளி­க­ளின் உடல்­ந­ல­னைப் பேணிக்காக்க வேண்­டும். அதே சம­யம் குடும்ப ஆத­ர­வும் அவர்­களுக்­குக் கிடைக்க வேண்­டும்.

"அவர்­கள் குண­ம­டை­வ­தற்கு அது மிக­வும் முக்­கி­யம். நோயாளி­களின் அன்­புக்­கு­ரி­ய­வர்­கள் அவர்­களை வந்து பார்க்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டா­லும் கிருமித்­தொற்­றால் எளி­தில் பாதிப்படை­யக்­கூ­டி­ய­வர்­

க­ளைப் பாது­காக்க தொடர்ந்து நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்று கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக் குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் சிங்­கப்பூர் மருத்­து­வச் சேவை­கள் இயக்­கு­நர் கென்­னத் மாக் நேற்று தெரி­வித்­தார்.

மருத்­து­வ­ம­னை­களில் தங்கி சிகிச்சை பெறும் ஒவ்­வொரு நோயாளி­யும் ஒரு நாளில் இரண்டு முறை வரு­கை­யா­ளர்­க­ளைச் சந்­திக்­க­லாம். ஒரே நேரத்­தில் இரு­வருக்கு மட்­டுமே அனு­மதி உண்டு.

ஒவ்­வொரு சந்­திப்­பும் அதி­க­பட்­சம் அரை மணி நேரம் நீடிக்­க­லாம்.

ஆனால் நோயா­ளி­யின் படுக்­கைக்­குப் பக்­கத்­தில் ஒரு­வ­ருக்கு மட்­டுமே அனு­மதி உண்டு.

நோயா­ளி­யைக் காண வரு­கை­யா­ளர்­க­ளுக்கு அதி­க­பட்­சம் 30 நிமி­டங்­கள் வழங்­கப்­படும். அசாதாரண சூழ்நிலை களில் வரு­கை­யா­ள­ருக்­கான நேரம் நீட்­டிக்­கப்­ப­டக்­கூ­டும்.

நோயாளி கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தால் அவ­ரைப் பார்க்க ஐவர் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

எனினும், ஒரே நேரத்­தில் இரு­வர் மட்டுமே படுக்­கைக்­கு அருகே சென்று நோயா­ளி­யைப் பார்க்­க­லாம்.

பரா­ம­ரிப்பு இல்­லங்­களில் அதி­க­பட்­சம் நான்கு வரு­கை­யா­ளர்­களுக்கு அனு­மதி வழங்­கப்­படும். ஒரு நேரத்­தில் ஒரு­வர் மட்­டுமே நோயா­ளி­யைச் சென்று பார்க்­க­லாம். ஒவ்­வொரு சந்­திப்­பும் அதி­க­பட்­சம் அரை மணி நேரம் நீடிக்­க­லாம்.

மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் பரா­மரிப்பு இல்­லங்­க­ளுக்­கும் செல்­லும் வரு­கை­யா­ளர்­கள் 24 மணி நேரத்­துக்­குள் சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெற்ற பரிசோதனை நிலையங்களிலோ, சுயமாகவோ ஏஆர்டி பரி­சோ­தனை செய்து கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

சமூக மன்ற நடவடிக்கைகள், நூலகம் செல்ல தடுப்பூசி தேவை

அடுத்த மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் மட்­டுமே தேசிய நூலக வாரியத்தின் நூலகங் களுக்குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

அதேபோல், சமூக மன்­றங்­களில் நடை­பெ­றும் குறிப்­பிட்ட சில நட­வடிக்­கை­களில் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் மட்­டுமே பங்­கேற்­க­லாம்.