கொவிட்-19 கட்டுப்பாடு தளர்த்தப்படும் நிலையில் வர்த்தகங்களுக்கும் தனிநபர்களுக்கும் வழங்கப்படும் ஆதரவு நடவடிக்கைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகளால் வெகுவாகப் பாதிக்கப்படும் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு சம்பள ஆதரவுத் திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.
இருப்பினும், தற்போதைய 25 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக அது குறைக்கப்படும்.
நாளை முதல் அடுத்த மாதம் 19ஆம் தேதிவரை வழங்கப்படும் இந்தச் சம்பள ஆதரவுத் திட்டம் $90 மில்லியன் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தேசிய சுற்றுப்புற வாரியம் அல்லது அதனால் நியமிக்கப்பட்டவர்
களால் நிர்வகிக்கப்படும் சந்தை மற்றும் உணவங்காடி நிலையங்களில் கடை வைத்திருப்போர் பாதி வாடகையை மட்டும் செலுத்தினால் போதும். டாக்சி ஓட்டுநர்களுக்கும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கும் கொவிட்-19 ஓட்டுநர் நிவாரண நிதி விரிவுப்படுத்தப்படும்.
அடுத்த மாதம் ஒவ்வொரு வாகன அடிப்படையில் அவர்களுக்கு தினந்தோறும் $10 வழங்கீடு கிடைக்கும். ஜனவரி மாதத்தில் அவர்களுக்கு நாள்தோறும் $5 வழங்கப்படும்.
எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகம் கிடைத்துள்ள வருவாயிலிருந்து தொகுப்புத் திட்டத்துக்கு நிதி வழங்கப்படுகிறது.