இந்தியாவுக்கு அன்றாடம் ஆறு விமான சேவைகள் ‘விடிஎல்’ மூலம் சென்னை, டெல்லி, மும்பை நகர்களுக்கு நவம்பர் 29 முதல் செல்லலாம்

சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நக­ரங்­க­ளுக்கு அன்­றா­டம் ஆறு விமான சேவை­க­ளு­டன் சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான தடுப்­பூசி பய­ணத்­தடத் திட்­டம் (விடி­எல்) இம்­மா­தம் 29ஆம் தேதி தொடங்­கு­கிறது.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான இந்தப்­பயணத் திட்­டத்­தின் கீழ் பய­ணம் செய்­வ­தற்­கான பயண அட்டைக்கு, குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­களும் நீண்­ட­கால வரு­கை­யா­ளர்­களும் சிங்­கப்­பூர் நேரப்­படி இன்று மாலை ஆறு மணி முதல் விண்­ணப்­பிக்கத் தொடங்­க­லாம்.

இந்த விவ­ரங்­களை சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்குவரத்து­ஆணை­யம் நேற்று வெளியிட்டது.

இரு நாடுகளுக்குமிடையே திட்­ட­மிட்ட பயணிகள் விமான சேவையை மீண்­டும் தொடங்குவது பற்றி இந்­திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்­சு­டன் உடன் ­பாடு காணப்பட்டுள்­ள­தாக சிங்கப்­பூர் சிவில் விமா­னப் போக்குவரத்து ஆணை­யம் தெரி­வித்­தது.

விடிஎல் சாராத விமான சேவை களை­யும் விமான நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வழங்க­லாம்.

எனினும், இத்­த­கைய விமா­னப் பய­ணங்­களை மேற்­கொள்­ளும் பய­ணி­கள் தற்­போ­துள்ள பொதுச் சுகா­தார விதி­மு­றை­க­ளுக்கு உட்படுத்­தப்­ப­டு­வர்.

"விடி­எல் பயண சேவை­கள் மற்றும் விடி­எல் சாராத பயண சேவை­களின் விவ­ரங்­கள் தயா­ரா­ன­தும் விமான சேவை நிறு­வ­னங்­கள் அவற்றை வெளி­யி­டும்," என்­றும் ஆணை­யம் கூறி­யது.

பயண அட்­டைக்கு விண்­ணப்­பிக்க அவ­ச­ரம் தேவை­யில்லை. வரும் 29ஆம் தேதி முதல் 2022 ஜன­வரி 21 வரை அல்­லது ஏழு முதல் 60 நாள்­க­ளுக்­கான பயண அட்­டை­கள் வழங்­கப்­படும் என்றும், டிசம்­பர் முதல் தேதிக்­குப் பிறகு சிங்­கப்­பூர் வர விரும்­பு­வோர், நவம்பர் 24ஆம் தேதிக்­குப் பிறகு விண்ணப்­பிக்கு­மாறும் ஆணையம் கேட்டுக்­கொண்­டது.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­ த­ர­வா­சி­கள், 12 வய­தும் அதற்­கும் குறை­வான வய­து­டைய குழந்­தை­கள் ஆகியோர் விடி­எல் திட்­டத்­தின் கீழ் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய விடிஎல் பயண அட்­டைக்கு விண்­ணப்­பிக்க வேண்­டி­ய­தில்லை.

விடி­எல் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யும் அனைத்து குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­களும் நீண்­ட­கால பாஸ் வைத்­தி­ருப்­ப­வர்­களும் தடுப்­பூசி போட்­டோ­ருக்­கான பயண அட்­டையைப் பெறு­வார்­கள்.

விண்­ணப்ப செயல்­மு­றையை எளி­தாக்க, விடி­எல் பயண அட்­டைக்கு விண்­ணப்­பிப்­போர், கட­வுச்­சீட்டு, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தற்­கான மின்­னி­லக்க ஆதா­ரம், சிங்­கப்­பூ­ரில் சுய­மாக தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளும் முக­வரி ஆகி­ய­வற்றை கையில் வைத்­தி­ருக்க வேண்­டும்.

மலே­சியா, இந்­தோ­னீ­சியா நாடு­க­ளி­லி­ருந்து வரும் குறு­கிய கால வரு­கை­யா­ளர்­களும் நீண்ட கால வரு­கை­யா­ளர்­களும் விடிஎல் பயண அட்­டைக்கு இன்று காலை 10 மணி முதல் விண்­ணப்பிக்கலாம்.

இந்­தியா, ஃபின்­லாந்து, ஸ்வீ­டன் நாடு­க­ளி­லி­ருந்து பய­ணம் செய்­ய விடி­எல் பயண அட்டைக் கான விண்­ணப்­பங்­கள் மாலை 6 மணிக்கே திறக்­கப்­படும்.

'விடி­எல்'-இன் கீழ், முழுமை யாகத் தடுப்­பூசி போட்­டுக்கொண்ட பய­ணி­கள் விடி­எல் நாடு­க­ளி­லிருந்து தனி­மைப்­ப­டுத்­தல் தேவை­யின்றி சிங்­கப்­பூ­ருக்கு வர­லாம்.

ஆனால் புறப்­ப­டு­வ­தற்கு இரண்டு நாள்­க­ளுக்கு முன்­பும் சாங்கி விமான நிலை­யத்­தில் இறங்­கி­ய­தும் பிசி­ஆர் கொவிட்-19 பரி­சோ­தனை செய்ய வேண்­டும்.

குடும்­பங்­க­ளை­ப் பிரிந்து தவிப்­ப­வர்­க­ளுக்­கும் விடு­மு­றைக்­காக ஏங்­கு­ப­வர்­க­ளுக்­கும் மிக­வும் நல்ல செய்தி என்­றார் குடாச்­சாரி மளி­கைக் கடை­யின் உரி­மை­யா­ளர் சீதா­தேவி, 40. வர்த்­த­கம் பெரு­கும் என்று அவ­ரைப்போல் பல­ரும் நம்­பிக்கை தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!