பயண அனுமதி விண்ணப்பம் செய்வதற்கான இணையப்பக்கம் முடங்கியது

வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூர் வர, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண அனுமதியைப் பெறுவதற்கான ‘சேஃப் டிராவல்’ இணையப் பக்கம் திங்கட்கிழமை (நவம்பர் 22) சில மணிநேரம் முடங்கியது.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வர விரும்புவோருக்கான விண்ணப்பங்கள் இன்று காலை தொடங்கிய நிலையில், இணையப்பக்கம் முடங்கியது.

நண்பகல் வாக்கில் அந்த இணையப் பக்கம் முடங்கியதாக நம்பப்படுகிறது. இணையப் பக்கத்தில் பராமரிப்புப் பணிகள் இடம்பெறுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிற்பகல் 3 மணிக்கு அந்த இணையப்பக்கத்திற்குச் சென்று பார்த்தபோது, அது மீண்டும் செயல்படுவது தெரிந்தது. எனினும், ஒரே நேரத்தில் அதிகமானோர் அந்த இணையப்பக்கத்தை நாடுவதால், விண்ணப்பம் செய்ய முடியாதோர் பிறகு மீண்டும் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தொடர்புகொண்டது.

அதற்குப் பதிலளித்த ஆணையம், “பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இணையப்பக்கத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவர நாங்கள் முற்படும் வேளையில், பொதுமக்களின் புரிதலை நாடுகிறோம்,” என்று கூறியது.

மலேசியாவிலிருந்து குறுகியகால வருகையாளர்களும் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரும் சிங்கப்பூர் வருவதற்கான பயண அனுமதி விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கின.

இந்தியா மற்றும் இந்தோனீசியாவிலிருந்து வருவோருக்கான விண்ணப்பங்கள் இன்று மாலை 6 மணிக்குத் தொடங்குகின்றன.

இதனால், இணையப்பக்கத்திற்கு வருவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!