40,000 பேர்க்கு $470 மி. வாடகை உதவி

40,000 பேர்க்கு $470 மி. வாடகை உதவி

3 mins read

சிங்­கப்­பூ­ரில் ஏறத்­தாழ இரண்டு மாத காலம் நீடித்த கட்­டுப்­பாட்டு கால­கட்­டத்­தின்­போது ஏற்­பட்ட வாட­கைக் செலவைச் சமா­ளிக்க நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வும் ஒரு முயற்­சி­யாக, வரும் வெள்­ளிக்­கி­ழமை­முதல் $470 மில்­லி­ய­னுக்­கும் அதிக தொகையை 40,000க்கும் மேற்­பட்ட வாடகை­தா­ரர்­களும் சொந்த கட்­ட­டத்­தில் தொழில் நடத்­து­வோ­ரும் பெறு­வார்­கள்.

வாடகை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ், இத்­து­டன் மூன்­றா­வது முறை­யாக பண உதவி கொடுக்­கப்­ப­டு­கிறது.

செப்­டம்­பர் 27 முதல் நவம்­பர் 21 வரைப்­பட்ட காலத்­திற்­கான ஒரு மாத வாடகைக்குச் சம­மான தொகையை அவர்­கள் பெறு­வார்­கள் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் ஏற்கெனவே அக்­டோ­பர் 20ஆம் தேதி அறி­வித்து இருந்­தார்.

இந்த வாடகை நிவா­ரண உதவி சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கும் லாப­நோக்­க மற்ற அமைப்­பு­க­ளுக்­கும் கிடைக்­கும். அவற்­றின் ஆண்டு வரு­வாய் $100 மில்லி­ய­னுக்­கும் குறை­வாக இருக்க வேண்­டும்.

வர்த்­தகக் கட்­ட­டங்­களில் வாடகைக்குத் தொழில் நடத்­து­வோ­ரும் சொந்த கட்­ட­டங்­களில் தொழில் நடத்­து­வோ­ரும் இதற்குத் தகுதி பெறு­வார்­கள்.

கட்­டட உரி­மை­யா­ளர்­க­ளி­டம் ஒப்­படைக்­கப்­ப­டா­மல் இந்­தத் தொகை வாட­கை­தாரர்­க­ளுக்கு நேர­டி­யா­கக் கொடுக்­கப்­படும் என்று நிதி அமைச்­சும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­ய­மும் நேற்று கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

கடந்த ஆகஸ்ட் மாத­மும் செப்­டம்­பர் மாத­மும் இதைப்போ­லவே வாடகை உதவித்தொகை கொடுக்­கப்­பட்­டது.

இந்த ஏற்­பாட்­டின்­ மூ­லம் அர­சாங்­கத்­தி­டம் இருந்து வாட­கை­தா­ரர்­க­ளுக்கு குறித்த காலத்­தில் உரிய முறை­யில் வாடகை உத­வித்­தொகை கிடைக்­கும் என்று அறிக்கை தெரி­வித்­தது.

மூன்று தவ­ணை­க­ளை­யும் சேர்த்து நேர­டி­யாக நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­படும் வாட­கைச் செலவு நிவா­ரண ஆதரவு மொத்தம் $900 மில்­லி­ய­னுக்­கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை உத­வித்­தொ­கை­யைப் பெற தகுதி உள்­ள­வர்­கள், 'பேநவ்' செயலி அல்லது 'ஜைரோ' ஏற்­பாட்­டைக் கொண்டிருந்­தால் வெள்­ளிக்­கி­ழமை முதல் அவர்­க­ளுக்­குப் பணம் கிடைக்­கும்.

இந்த வசதி இல்­லா­த­வர்­கள் டிசம்­பர் 10ஆம் தேதி வாக்­கில் காசோ­லை­யைப் பெறு­வார்­கள். இரண்­டா­வது தவ­ணை­யாக உத­வித்­தொ­கை­யைப் பெற்­றுள்ள வாட­கை­தா­ரர்­களும் சொந்தக் கட்­ட­டத்­தில் தொழில் நடத்­து­வோ­ரும் தொடர்ந்து மூன்­றா­வது தவணை உத­வி­யை­யும் பெறு­வார்­கள் என்று இந்த இரண்டு அமைப்பு­களும் தெரி­வித்­தன.

இரண்­டா­வது தவணை பண உதவிக்குத் தகு­தி­பெ­றா­மல் மூன்­றா­வது தவணை பண உத­விக்குத் தகு­தி­பெ­று­வோர் இந்த ஆணை­யத்­தி­டம் டிசம்­பர் 10 முதல் அடுத்த ஆண்டு ஜன­வரி 21 வரை விண்­ணப்­பத்­தைத் தாக்­கல் செய்­ய­வேண்­டும்.

வாடகை ஆத­ரவு திட்­டத்­தின் இரண்டா­வது தவ­ணை­யின்­கீழ் செப்­டம்­பர் 22 முதல் 35,800க்கும் மேற்­பட்ட வாட­கை­தா­ரர்­க­ளுக்­கும் சொந்தக் கட்­ட­டத்­தில் தொழில் நடத்­து­வோ­ருக்­கும் உதவி கிடைத்­தது.

இது ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 18 வரைப்­பட்ட கால­கட்­டத்­திற்­கான மாத வாட­கை­யில் பாதி அள­வுக்கு இருந்­தது.

அவர்­கள் ஒரு மாதத்­திற்கு முன்­பாகவே $200 மில்­லி­ய­னுக்­கும் அதிக தொகை­யைப் பெற்­ற­னர்.

கூடி­ய­வி­ரை­வில் ரொக்க நிவா­ர­ணம் அவர்­க­ளுக்குக் கிடைப்­ப­தற்­காக முன்­ன­தா­கவே அந்த உத­வியை அர­சாங்­கம் அளித்­தது. இந்­தத் திட்­டத்­தின்­கீழ் முதல் தவணை உதவி ஆகஸ்ட் 6 முதல் கொடுக்­கப்­பட்­டது.

சொந்த இடத்தில் தொழில் நடத்துவோர், வாடகைதாரர்களுக்கு 3வது முறையாகக் கொடுக்கப்படுகிறது