மவுண்ட் பிளசண்ட்டில் புதிதாக 5,000 வீடுகள்

மவுண்ட் பிளசண்ட்டில் புதிதாக 5,000 வீடுகள்

2 mins read
ce5ac372-fc0a-4819-9a41-f37d95e5f0e7
வீடுகள் கட்டப்பட இருக்கும் பகுதி. இயற்கை வளம், மரபுடைமை ஆகியவற்றின் பின்னணியில் புதிய பொது வீடமைப்புப் பேட்டையின் வடிவம் இடம்பெறும். படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம் -

மவுண்ட் பிள­சண்ட் வட்­டா­ரத்­தில் சுமார் 5,000 வீடு­க­ளு­டன் புதிய பொது வீட­மைப்­புப் பேட்டை உரு­வாக்­கப்­பட உள்­ளது. அந்த வட்­டா­ரத்­தில் பழைய காவல்­துறை கல்­விக்­க­ழ­கம் அமைந்துள்ள இடத்­தில் புதிய வீடு­களை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் கட்­டும்.

அடுத்த ஐந்­தாண்­டு­களில் தொடங்­கப்­பட இருக்­கும் முதல் தேவைக்­கேற்ப கட்­டித் தரப்­படும் (பிடிஓ) திட்­ட­மாக அது அமை­யும். பொது வீட­மைப்­புப் பேட்டை என்­பது இன்­னும் யோசனை வடி­வில் இருந்­த­போ­தி­லும் மவுண்ட் பிள­சண்ட் வட்­டா­ரத்­தின் இயற்கை வளத்­தை­யும் மர­பு­டை­மை­யை­யும் அடிப்­ப­டை­யா­கக் கொண்டு அதன் வடி­வ­மைப்பு உரு­வாக்­கப்­படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ கூறி­னார்.

இந்­தப் புதிய பேட்டை 33 ஹெக்­டர் பரப்­ப­ள­வில், அதா­வது பிடா­டரி தளத்­தின் மூன்­றில் ஒரு பகு­தி­யில் புதிய வீடு­கள் கட்­டப்­படும். தாம்­சன் ரோடு, தீவு விரை­வுச்­சாலை போன்­றவை அதன் சுற்­று­வட்­டா­ரத்­தில் இருக்­கும்.

மேலும் முதிர்ச்­சி­ய­டைந்த தோ பாயோ நக­ருக்கு அரு­கில் இது அமை­யும். பழைய காவல்­துறை கல்­விக்­க­ழ­கத்­தின் பகு­தி­யாக அமைந்­துள்ள நான்கு கட்­ட­டங்­களும் அணி­வ­குப்பு சதுக்­க­மும் தொடர்ந்து பாது­காக்­கப்­ப­டு­வ­தோடு வருங்­கா­லக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குச் சேவை­யாற்­றக்­கூ­டிய சமூ­கக் கூடங்­க­ளாக அவை பயன்­ப­டுத்­தப்­படும்.

சில்­ல­றைக் கடை­கள் உள்­ளிட்ட வச­தி­க­ளு­டன் கூடிய அக்­கப்­பக்க மையம் ஒன்­றும் புதிய பேட்­டை­யின் அரு­கில் அமை­யும்.

திறந்­த­வெளி, பசு­மைப் பகு­தி­யு­டன் சமூக வெளி வச­தி­

க­ளு­டன் கூடி­ய­தா­க­வும் புதிய வட்­டா­ரம் வடி­வ­மைக்­கப்­படும் என்று வீவக, நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம், சிங்­கப்­பூர் நில ஆணை­யம் ஆகி­யன நேற்று கூட்­டாக வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இயன்­ற­வரை அந்த வட்­டா­ரத்­தின் இயற்கை வளத்­தை­யும் மர­பு­டைமை அம்­சங்­க­ளை­யும் பழைய கட்­ட­டங்­க­ளை­யும் காப்­பது தொடர்­பாக சில குழுக்­க­ளு­ட­னும் காவல்­துறை சமூ­கத்­து­ட­னும் அதி­கா­ரி­கள் கலந்து பேசி உள்­ள­னர்.

இதற்­கி­டையே, இந்த வட்­டா­ரத்­திற்­குத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள சாலைக் கட்­ட­மைப்பு சரி­செய்­யப்­பட்டு வரு­வ­தாக நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­ய­மும் சிங்­கப்­பூர் நில ஆணை­ய­மும் கூறி­யுள்­ளன.

சுற்­றுச்­சூ­ழல் தாக்­கம் தொடர்­பாக 2019 முதல் ஈராண்­டு­க­ளாக வீவக நடத்­திய ஆய்­வின் முடி­வைத் தொடர்ந்து சாலைக் கட்­ட­மைப்பு சரி செய்­யப்­ப­டு­கிறது. வீடு­கள் அமைய உள்ள பகுதி களை உள்­ள­டக்­கிய 71.6 ஹெக்­ட­ரில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அவை தெரி­வித்­தன.