சிங்கப்பூர்-இந்தியா: ‘விடிஎல்’ பயணச்சீட்டு விறுவிறு விற்பனை

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர்க்­கான பய­ணத்­த­டத் திட்­டத்­தின்­கீழ் (விடி­எல்) வரும் 29ஆம் தேதி­யி­லி­ருந்து சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) இந்­தி­யா­வின் சென்னை, மும்பை, டெல்லி நக­ரங்­க­ளுக்கு விமா­னங்­களை இயக்க இருக்­கிறது. விமானச் சேவை­க­ளுக்­கான பய­ணச்­சீட்டு முன்­ப­திவு நேற்று முன்­தி­னம் தொடங்­கிய நிலை­யில், பய­ணச்­சீட்டு விற்­பனை விறு­வி­றுப்­பாக நடைபெறுவதாகக் கூறப்­ப­டு­கிறது.

‘விடி­எல்’ திட்­டத்­தின்­கீழ் பய­ணம் செய்ய தங்­க­ளுக்­குத் தகுதி இருக்­கி­றதா என்­ப­தைப் பய­ணி­கள் உறுதி­செய்­து­கொள்­ளு­மாறு எஸ்­ஐஏ அறி­வு­றுத்தி இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள் அல்­லா­தோர் ‘விடி­எல்’ திட்­டத்­தின்­கீழ் பய­ணம் செய்ய விரும்­பி­னால், விசா­வுக்கு விண்­ணப்­பிக்­கு­முன் தடுப்­பூ­சிப் பயண அனு­ம­தி­யைப் பெற அவர்­கள் விண்­ணப்­பம் செய்ய வேண்­டும்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள் மற்­றும் நிரந்­த­ர­வா­சி­களும், 12 மற்­றும் அதற்­கும்­கீழ் வய­து­டைய சிறார்­களும் ‘விடி­எல்’ திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூர் வர பயண அனு­மதி கோரி விண்­ணப்­பம் செய்யத் தேவையில்லை.

இந்­தி­யா­வின் அக­ம­தா­பாத், பெங்­க­ளூரு, ஹைத­ரா­பாத், கொச்சி, கோல்­கத்தா ஆகிய நக­ரங்­க­ளுக்கு இம்­மா­தம் 29ஆம் தேதி­யி­லி­ருந்து ‘விடி­எல்’ அல்­லாத விமா­னங்­க­ளை­யும் படிப்­ப­டி­யாக இயக்­க­வி­ருப்­ப­தாக எஸ்­ஐஏ அறி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, இம்­மா­தம் 30ஆம் தேதி­யி­லி­ருந்து சிங்­கப்­பூர் - ஹைத­ரா­பாத் இடையே வாரம் நான்கு முறை­யும் டிசம்­பர் 2ஆம் தேதி­யில் இருந்து சிங்­கப்­பூர் - திருச்சி இடையே வாரம் மூன்று முறை­யும் ‘விடி­எல்’ அல்­லாத விமா­னங்­களை இயக்­க­வி­ருப்­ப­தாக எஸ்­ஐ­ஏ­வின் மலி­வுக் கட்­டண விமான நிறு­வ­ன­மான ஸ்கூட் அறி­வித்திருக்­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!