சென்னை-சிங்கப்பூர் இடையே இண்டிகோ ‘விடிஎல்’ விமானச் சேவை

தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) இம்மாதம் 29ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானச் சேவையை தொடங்கவிருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

சென்னை-சிங்கப்பூர் வழித்தடத்தில் இண்டிகோ நாள்தோறும் ‘விடிஎல்’  விமானச் சேவையை வழங்கும். 

“இந்தியா-சிங்கப்பூர் இடையிலான கொரோனா பாதுகாப்பு வளைய (air bubble) உடன்பாட்டின்படி, வாரத்திற்கு 3,618 பயண இருக்கைகள் இண்டிகோ நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், 1,624 இருக்கைகள், சென்னை-சிங்கப்பூர் ‘விடிஎல்’ விமானச் சேவைக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன,” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய இருக்கைகள் சென்னை-சிங்கப்பூர் இடையே ‘விடிஎல்’ அல்லாத விமானச் சேவையின்கீழ் வரும்.

இம்மாதம் 29ஆம் தேதியில் இருந்து, ‘விடிஎல்’ திட்டத்தின்கீழ் சிங்கப்பூர்-சென்னை இடையே விமானச் சேவையை வழங்கவிருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!