அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு மாத போனஸ் அறிவிப்பு

அரசாங்க ஊழியர்கள் அனைவர்க்கும் ஆண்டிறுதி போனசாக ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு அறிவித்துள்ளது.


இளநிலை ஊழியர்களுக்குக் கூடுதலாக ஒருமுறை மட்டும் $500 வழங்கப்படும். MX15 மற்றும் MX16 தரநிலைகளுக்கு நிகரான பதவிகளில் இருப்போர்க்கும் ஓஎஸ்எஸ் தரநிலை III, IV ஊழியர்களுக்கும் இந்தக் கூடுதல் தொகை கிடைக்கும்.


“கடந்த ஓராண்டாக, கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தேசிய அளவிலான போரில் அரசாங்க ஊழியர்கள் தங்களை அர்ப்பணித்து வந்துள்ளனர். சிங்கப்பூரையும் சிங்கப்பூரர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் களைப்பறியாது பணியாற்றி வருகின்றனர்,” என்று பொதுச் சேவைப் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அவர்களது நீடித்த கடின உழைப்பையும் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பலதரப்பட்ட பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் போனஸ் வழங்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.


இதனுடன், வழக்கம்போல் அரசாங்க ஊழியர்கள் அனைவர்க்கும் 13வது மாத போனஸ் எனக் குறிப்பிடப்படும் வருடாந்திர சம்பள நிரப்புத்தொகையும் (AWS) வழங்கப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!