அல்லாடிய ஆயிரக்கணக்கான பயணிகள் விற்பனை தொடங்கியதுமே விற்றுத் தீர்ந்த சிங்கப்பூர் - மலேசியா தரைவழி விடிஎல் பயணச்சீட்டுகள்

சிங்­கப்­பூர்-மலே­சியா தரை­வழி தடுப்­பூ­சிப் பய­ணத்­த­டத் திட்­டம் (விடி­எல்) வழி ஜோகூர் பாருக்­குச் செல்­வ­தற்­கான பேருந்­துப் பய­ணச்­சீட்­டு­கள் விற்­ப­னைக்கு விடப்­பட்ட சிறிது நேரத்­துக்­குள்­ளா­கவே விற்றுத் தீர்ந்­தன.

பய­ணச்­சீட்டு வாங்க நேற்று நாள் முழு­வ­தும் ஆயி­ரக்­க­ணக்­கான பய­ணி­கள் அல்­லா­டி­யதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

நேற்­றுக் காலை 8 மணிக்கு விற்­பனை தொடங்­கி­ய­துமே பயணச்­சீட்­டு­களை வாங்க ஆயிரக்­கணக்­கா­னோர் அலை­மோ­தி­ய­தாக பேருந்து சேவை நிறு­வ­னங்­கள் கூறின.

விற்­ப­னைக்கு விடப்­பட்ட 20 நிமி­டங்­களில் அவை விற்­றுத் தீர்ந்­தாக நிறு­வ­னங்­கள் தெரி­வித்­தன. எனி­னும் பின்­னர் பய­ணச்­சீட்­டு­களை வாங்க முடிந்­த­தாக இணை­ய­வா­சி­கள் கூறி­னர்.

சிங்­கப்­பூ­ருக்­கும் ஜோகூர் பாருக்­கும் இடையே பேருந்­துச் சேவை வழங்­கும் சிங்­கப்­பூ­ரின் ‘டிரான்ஸ்­டார் டிரா­வல்’ நிறு­வ­னம், மலே­சி­யா­வின் ஹண்­டால் இண்டா (காஸ்வே லிங்க்) நிறு­வனம் ஆகிய இரு நிறு­வ­னங்­களின் இணை­யப் பக்­கங்­களில் நேற்றுக் காலை 8 மணிக்கு பய­ணச்­சீட்­டு­கள் விற்­பனைக்கு விடப்­பட்­டன.

பய­ணச்­சீட்­டு­களை வாங்க ஒரே நேரத்­தில் அதி­க­மா­னோர் இணை­யப் பக்­கங்களுக்குச் சென்றதால் அவர்­க­ளைக் கையாள மெய்­நி­கர் காத்­தி­ருப்பு அறை­கள் அமைக்­கப்­பட்­டன.

அதி­க­ரித்­துள்ள தேவை­யைச் சமா­ளிக்க முடி­யா­மல் இரு இணை­யப் பக்­கங்­களும் தடு­மாறின. தொழில்­நுட்­பக் கோளா­று­கள் ஏற்பட்­ட­தாக சிலர் கூறி­னர்.

பய­ணச்­சீட்­டு­க­ளுக்கு முன்­பதிவு செய்­வ­தில் தாங்­கள் சிரமத்தை எதிர்­நோக்­கி­ய­தாக சில பய­னர்­கள் கூறி­னர்.

‘டிரான்ஸ்­டார் டிரா­வல்’ பய­ணச்­சீட்­டு­களை முன்­ப­திவு செய்ய பய­ணி­க­ளுக்கு 15 நிமி­டங்­கள் கொடுத்­தது. ஒரு பய­ணத்­திற்கு ஐந்து இடங்­கள்­வரை பதிவு செய்­ய­லாம். காலை 8.23 ​​மணிக்கு அடுத்த 30 நாள்களுக்கான அனைத்து­ப் ப­ய­ணச்­சீட்­டு­களும் விற்­றுத் தீர்ந்­து­விட்­ட­தாக இணை­யப் பக்­கத்­தில் வெளியிடப்பட்ட அறி­விப்பு தெரி­வித்­தது.

இடம் கிடைக்­கும்­போது பய­னர்­கள் பேருந்து சேவை நிறு­வன இணை­ய­வா­ச­லுக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்று இணை­ய­த் த­ளம் பின்­னர் கூறி­யது.

காலை 8 மணி முதல் காத்தி­ருந்த பிறகு, மதி­யம் 2.48 மணிக்கு பய­ணச்­சீட்­டு­களை முன்­ப­திவு செய்ய முடிந்­த­தாக பேஸ்­புக் பய­னர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

ஹண்­டல் இன்டா-வின் இணை­ய­த்த­ளத்­தின் மெய்­நிகர் காத்­தி­ருப்பு அறை­யில் 10,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் வரிசை ­பி­டித்­த­னர். பய­னர்­க­ளுக்கு இணை­யத் தளத்­தில் நுழைய 10 நிமி­டங்­கள் இருப்­ப­தா­கக் கூறப்­பட்­ட­து­டன், அவர்­க­ளுக்கு முன்­ காத்திருப்போர் எண்­ணிக்கையும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

திரு தன­பால் முரு­கையா, 36, உள்ளிட்ட சிலர் இணை­ய­த­ளத்­திற்குள் நுழை­வ­தற்குள் அல்­லது பணம் செலுத்­து­வ­தற்கு முன்பே வெளி­யே­றும்நிலை ஏற்­பட்­டது. சில சம­யங்­களில், இணை­ய­த்த­ளம் செய­லி­ழந்­தது.

மாலை 6.20 மணி நில­வ­ரப்­படி, பய­ணச்­சீட்­டு­கள் விற்­ப­னைக்கு வந்­த­தி­லி­ருந்து காஸ்வே லிங்க் இணை­ய­த்த­ளத்­தில் காத்­தி­ருந்த போதி­லும், திரு தன­பா­லுக்கு பயணச்­சீட்டு கிடைக்­க­வில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ செய்தி கூறியது.

வரும் திங்­கள் முதல் டிசம்­பர் 5ஆம் தேதி வரை­யி­லான பய­ணச்­சீட்­டு­கள் மட்­டுமே இப்­போ­தைக்கு கிடைக்­கும் என்று ஹண்­டல் இன்டா தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­துள்­ளது.

மலே­சியப் பேருந்து சேவை­யின் செய்­தித் தொடர்­பா­ளர், அதி­காரி ­க­ளின் ஒப்­பு­த­லுக்கு உட்­பட்டு, இரண்­டா­வது தொகுதி பய­ணச்­சீட்­டு­க­ளுக்­கான விற்­பனை டிசம்பர் 3ஆம் தேதி தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார்.

சிங்­கப்­பூர்-மலே­சியா தரை­வழி விடி­எல் இம்­மா­தம் 29ஆம் தொடங்­கும் என நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போர் என மலே­சி­யா­வில் இருந்து ஒவ்­வொ­ரு­நா­ளும் 1,440 பேர்­வரை உட்­லண்ட்ஸ் கடற்­பா­லம் வழி­யாக சிங்­கப்­பூ­ருக்கு வர­வும் மலே­சியா செல்­ல­வும் முடியும்.

சிங்­கப்­பூ­ரில் இருந்து மலே­சியா செல்­வ­தற்­கான பேருந்­துக் கட்­ட­ணம் பெரி­ய­வர்­க­ளுக்கு $15, சிறார்­க­ளுக்கு $8 என நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. மலே­சி­யா­வில் இருந்து சிங்­கப்­பூர் வர, பெரி­ய­வர்­க­ளுக்கு 20 ரிங்­கிட்­டுக்­கும் சிறு­வர்­க­ளுக்கு 10 ரிங்­கிட்­டுக்­கும் பேருந்­துக் கட்­ட­ணம் விதிக்­கப்­படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!