அரசாங்க ஊழியர்க்கு ஒரு மாத போனஸ்

அரசாங்க ஊழியர்க்கு ஒரு மாத போனஸ்

1 mins read

அர­சாங்க ஊழி­யர்­கள் அனைவரும் ஒரு மாத ஆண்டிறுதி போன­ஸைப் பெறு­வர்­ என்று என்று பொதுச் சேவைத் துறை அறி­வித்­துள்­ளது.

இள­நிலை ஊழி­யர்­கள் கூடுதலாக ஒரு­முறை மட்­டும் வழங்­கப்­படும் $500 தொகை­யைப் பெறு­வார்­கள். எம்­எக்ஸ்15, எம்எக்ஸ்16 தர­நி­லை­க­ளுக்கு நிகரான பத­வி­களில் இருப்­போரும் 'ஓஎஸ்­எஸ்' தர­நிலை III, IV ஊழி­யர்­களும் இந்­தக் கூடு­தல் தொகை­யைப் பெறு­வார்­கள்.

"கடந்த ஓராண்­டு காலமாக, கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான தேசிய அள­வி­லான போரில் அரசாங்க ஊழி­யர்­கள் தங்­களை அர்ப்­ப­ணித்து வந்­துள்­ள­னர். சிங்கப்­பூ­ரை­யும் சிங்­கப்­பூ­ரர்­களையும் பாது­காப்­பாக வைத்திருக்க அவர்­கள் அயராது பணியாற்றி வரு­கின்­ற­னர்," என்று பொதுச் சேவைத் துறை நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

அவர்­க­ளது நீடித்த கடின உழைப்­பை­யும் கொவிட்-19 தொற்றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் அவர்­க­ளது பல­த­ரப்­பட்ட பங்­க­ளிப்­புகளையும் அங்கீகரிக்கும் வகை­யில் போனஸ் வழங்­கப்­படு­வ­தாக அறிக்கை குறிப்­பிட்­டுள்ளது.

இத­னு­டன், வழக்­கம்­போல் அரசாங்க ஊழி­யர்­கள் அனைவர்க்­கும் 13வது மாத போனஸ் எனக் குறிப்­பி­டப்­படும் ஆண்டு சம்­பள நிரப்­புத்­தொ­கை­யும் (AWS) வழங்கப்­படும்.