தனிமையிலிருந்து விடுதலை அடைந்த சிங்கங்களின் சுதந்திர கர்ஜனை

தனிமையிலிருந்து விடுதலை அடைந்த சிங்கங்களின் சுதந்திர கர்ஜனை

1 mins read
b4aa57ce-6a8c-42d2-946d-b84a18b9fc22
-

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் காணப்படும் ஆப்பிரிக்க சிங்கக் காட்சி நாளை மீண்டும் திறக்கப்படும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்கு மொத்தம் ஐந்து சிங்கங்களுக்கு கொவிட்-19 கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. மொத்தம் பதினான்கு சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. அவற்றில் ஐந்து சிங்கங்கள் ஆசியாவைச் சேர்ந்தவை, ஒன்பது சிங்கங்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை. அங்குள்ள ஆப்பிரிக்க சிங்கங்களிடையே கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தற்போது தென்படாததால் அவற்றின் மீதான தனிமை உத்தரவு அகற்றப்பட்டதாக மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.

நான்கு ஆசிய சிங்கங்களுக்கும் ஒரு ஆப்பிரிக்க சிங்கத்திற்கும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக நம்பவர் 10 ஆம் தேதியன்று தகவல் வெளியானது.