மேலும் ஆறு நாடுகள் சேர்ப்பு

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் தடத் திட்­டம் மேலும் ஆறு நாடு­க­ளுக்கு

விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

அடுத்த மாத நடுப்­ப­கு­தி­யி

­லி­ருந்து தாய்­லாந்து, கம்­போ­டியா, ஃபிஜி, மாலத் தீவு, இலங்கை, துருக்கி ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­ட­ மாட்­டார்­கள் என்று சிங்­கப்­பூர் சிவில்

விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று அறி­வித்­தது.

இவற்­று­டன் சேர்த்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் தடங்­க­ளின் எண்­ணிக்கை 27ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லைக்கு முன்பு இந்த 27 நாடு

­க­ளி­லி­ருந்து அதி­க­மான பய­ணி­கள் சிங்­கப்­பூர் வந்­த­னர்.

சாங்கி விமான நிலை­யம் வழி சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­களில் 60 விழுக்­காட்­டி­னர் இந்த நாடு­

க­ளி­லி­ருந்து வந்­த­னர்.

புதிய பய­ணத் தடங்­கள் சாங்கி விமான நிலை­யத்­தின் கட்­ட­மைப்பை மேலும் விரி­வு­ப­டுத்­தும். அத்­து­டன் உல­க­ளா­விய தொடர்­பு­டன் அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்து நடு­வ­மாக சிங்­கப்­பூ­ரின் நிலையை அது மீட்­டுத் தரும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

அடுத்த மாதம் 14ஆம் தேதி­யி­லி­ருந்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் தடத் திட்­டத்­தின்­கீழ் தாய்­லாந்­தி­லி­ருந்து வரும் பய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­ய­லாம்.

கம்­போ­டியா, ஃபிஜி, மாலத் தீவு, இலங்கை, துருக்கி ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­கள் அடுத்த மாதம் 16ஆம் தேதி­யி­லி­ருந்து இத்­திட்­டத்­தின் வழி சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­ய­லாம்.

இத்­திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள்

தனி­மைப்­ப­டுத்­தப்­ப­ட­ மாட்­டார்­கள். அவர்­கள் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொண்­டால் போதும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத 12 வய­தும் அதற்­கும் குறை­வான சிறு­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் தடத் திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ருக்கு வர அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

ஆனால் அவர்­கள் தங்­கள் பெற்­றோ­ரு­டன் பய­ணம் செய்ய வேண்­டும். அது­மட்­டு­மல்­லா­மல், அவர்­க­ளது பெற்­றோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும்.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளின்­கீழ் கொவிட்-19 அபா­ய­மிக்க நாடு­கள் பட்­டி­ய­லில் தாய்­லாந்து, கம்­போ­டியா, ஃபிஜி, மாலத் தீவு, இலங்கை, துருக்­கி ஆகிய நாடு­கள் இரண்­டா­வது பிரி­வில் இடம்­பெ­று­கின்­றன. இந்­தப் பிரி­வில் இடம்­பெ­றும் நாடு­கள் சிங்­கப்­பூ­ரி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் தடத் திட்­டத்­தில் சேர்க்­கப்­பட்­டுள்ள நாடு­க­ளி­லும் பதி­வா­கும் கொவிட்-19 பாதிப்பு விகி­தத்­தை­விட குறை­வான அல்­லது அதே போன்ற விகி­தத்­தைக் கொண்­டவை என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­க­ளுக்கு கம்­போ­டியா, மாலத் தீவு, இலங்கை, தாய்­லாந்து ஆகிய நாடு­கள் அவற்­றின் எல்­லை­களை ஏற்­கெ­னவே திறந்­து­விட்­டன. இந்த நான்கு நாடு­க­ளுக்­குச் செல்­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட

பய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­ட­

மாட்­டார்­கள்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள் இம்­மா­தம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டா­மல் தாய்­லாந்­துக்­குப் பய­ணம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதே­போன்ற ஏற்­பாட்டை கம்­போ­டியா இம்­மா­தம் 15ஆம் தேதி­யி­லி­ருந்து நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது. தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூர் பய­ணி­களைத் துருக்கி தனி­மைப்­ப­டுத்­தாது.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூ­ரு­டன் மேலும் 39 நாடு­க­ளி­லி­ருந்து வரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­க­ளுக்கு அடுத்த மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து ஃபிஜி தனது எல்­லை­க­ளைத் திறந்­து­விட இருக்­கிறது.

ஆறு ஐரோப்­பிய நாடு­கள் மீதான எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­படும்

ஆஸ்­தி­ரியா, பெல்­ஜி­யம், குரோ­வே­ஷியா, செக் குடி­ய­ரசு, லெய்ட்டன்ஸ்டைன், சுலோ­வாக்­கியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூர் வரும் பய­ணி­கள் மீதான எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

அடுத்த மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து இந்த நாடு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூர் வரும் பய­ணி­க­ளுக்குப் பத்து நாள் இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும். இந்த ஆறு நாடு­க­ளி­லும் கொவிட்-19 பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தால் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!