ஏழு ஆப்பிரிக்க நாடுகள் மீது பயணக் கட்டுப்பாடுகள்

உரு­மா­றிய கொவிட்-19 கிருமி வகை­யான பி.1.1.529 மிக வேக­

மா­கப் பர­வக்­கூ­டி­யது எனக் கூறப்­

ப­டு­கிறது.

அது சில ஆப்­பி­ரிக்க நாடு­களில் பரவி வரு­வ­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­னதை அடுத்து, ஏழு ஆப்­பி­ரிக்க நாடு­கள் மீதான பய­ணக் கட்­டுப்­பா­டு­களை சுகா­தார அமைச்சு கடு­மை­யாக்­கி­யுள்­ளது.

அண்­மை­யில் போட்ஸ்­வானா, எஸ்­வாட்­டினி, லெசோத்தோ, மொஸாம்­பிக், நமி­பியா, தென்­னாப்­பி­ரிக்கா, ஸிம்­பாப்வே ஆகிய ஆப்­பி­ரிக்க நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொண்ட பய­ணி­க­ளுக்கு இன்று இரவு 11.59 மணி­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­யவோ சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வேறு நாடு­க­ளுக்­குப் பய­ணம் செய்­யவோ அனு­மதி வழங்­கப்­ப­டாது.

சிங்­கப்­பூ­ருக்கு வர ஏற்

கெனவே அனு­மதி பெற்­றி­ருந்

தாலும் கடந்த 14 நாட்­களில் மேல் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ஆப்­பி­ரிக்க நாடு­க­ளுக்­குச் சென்­றி­ருந்­தால் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய முடி­யாது. அந்த ஏழு ஆப்­பி­ரிக்க நாடுகளி­லி­ருந்து சிங்­கப்­பூர் திரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் நிரந்­தர

வாசி­க­ளுக்­கும் இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும். அதற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள இடங்­களில் அவர்­கள் உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டும்.

சிங்­கப்­பூ­ரில் புதிய உரு­மா­றிய கொவிட்-19 கிருமி வகை­யால் யாருக்­கும் பாதிப்பு இல்லை என்று சுகா­தார அமைச்சு உறு­திப்

படுத்­தி­யுள்­ளது.

"புதிய உரு­மா­றிய கொவிட்-19 கிரு­மி­ வகை மற்ற கிரு­மி­ வ­கை­யை­விட வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது என்று கூறப்­ப­டு­கிறது. இருப்­பி­னும், அது எந்த அள­வுக்கு உடல்­நி­லை­யைப் பாதிக்­கும் என்று இன்­னும் தெரி­ய­வில்லை. இது

குறித்து நாங்­கள் விசா­ரணை நடத்­து­கி­றோம். கிடைக்­கும் தரவு களைக் கொண்டு எல்­லைக்

கட்­டுப்­பா­டு­கள் குறித்து மறு­ஆய்வு செய்­வோம்," என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

புதிய கிரு­மி­ வ­கை­யால் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் கொவிட்-19 பாதிப்பு அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இம்­மா­தத் தொடக்­கத்­து­டன் ஒப்­பி­டும்­போது அந்­நாட்­டில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை பத்து மடங்கு அதி­க­ரித்­துள்­ளது. ஹாங்­காங்­கி­லும் புதிய கிரு­மி­ வ­கை­யால் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக தென்­னாப்­பி­ரிக்கா மற்­றும் மேலும் ஐந்து ஆப்­பி­ரிக்க நாடு­க­ளு­ட­னான

பய­ணத் தடையை பிரிட்­டன் அறி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, தென்­னாப்

பிரிக்கா மற்­றும் புதிய கிருமி வகை­யால் பாதிக்­க­ப்பட்­டுள்ள

தாகக் கூறப்­படும் நாடு­க­ளி­

லி­ருந்து இந்­தி­யா­வுக்கு வரு­வோரைத் தீவிர கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தும்­படி அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் இந்­தி­யா­வின் மத்­திய அரசு

உத்­த­ர­விட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!