பிரதமர் லீ: சமூக, பொருளியல் பாதிப்பிலிருந்து மீண்டுவர மீள்திறன் மிகவும் அவசியம்

பிரதமர் லீ: சமூக, பொருளியல் பாதிப்பிலிருந்து மீண்டுவர மீள்திறன் மிகவும் அவசியம்

1 mins read
136be73d-ba15-4899-ad35-2cc185947652
-

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் ஏற்­பட்­டுள்ள சமூக, பொரு­ளி­யல் பாதிப்­பு­களை முறி­ய­டித்து அவற்­றி­லி­ருந்து மீண்­டு­வர மீள்­தி­றன் மிக­வும் அவ­சி­யம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

எனவே, ஆசிய நாடு­களும் ஐரோப்­பிய நாடு­களும் ஒன்­றி­ணைந்து இந்­தச் சவாலை எதிர்­கொள்ள வேண்­டும் என்று மெய்­நி­கர் முறை­யில் நேற்று நடை­பெற்ற ஆசிய-ஐரோப்­பிய உச்­ச­நிலை மாநாட்­டில் திரு லீ வலி­யு­றுத்­தி­னார்.

"உதா­ர­ணத்­துக்கு, பொதுத் துறை, தனி­யார் துறை­யில் நமக்­குக் கிடைத்­துள்ள அனு­ப­வங்­களை நாம் பகிர்ந்­து­கொள்ள ஏற்­பாடு செய்­ய­லாம். விநி­யோக முறை மீண்­டும் முழு­மை­யா­கச் செயல்­ப­ட­வும் அனைத்­து­ல­கப் பய­ணங்­

க­ளைப் பாது­காப்­பான முறை­யில் மீண்­டும் தொடங்­க­வும் ஆசிய நாடு­களும் ஐரோப்­பிய நாடு­களும் இணைந்து செயல்­பட வேண்­டும்," என்று திரு லீ கூறி­னார்.

நெருக்கடிநிலையால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஒன்றிணைந்து தீர்வு காண அழைப்பு விடுத்த பிரதமர் லீ சியன் லூங்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்