தென்னாப்பிரிக்காவின் இரு பெருநகர்களில் கொவிட்-19 தொற்று வேகமாக அதிகரிப்பு

டர்பன்: தென்னாப்பிரிக்காவில் உள்ள இரு பெரிய நகராட்சிப் பகுதிகளில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதை கழிவுநீர் ஆய்வு காட்டுவதாக தென்னாப்பிரிக்க மருத்துவ ஆய்வு மன்றம் தெரிவித்துள்ளது.

ஷுவான் மற்றும் நெல்சன் மண்டேலா பே ஆகிய இரு நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்பட்டுள்ள கழிவுநீர் மாதிரியில் கிருமிக் கூறுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஷுவானில் 2.9 மில்லியன் பேரும் நெல்சன் மண்டேலா பேயில் 1.15 மில்லியனுக்கு மேற்பட்டோரும் வசிக்கின்றனர்.

‘ஓமிக்ரான்’ எனப்படும் புதுவகை கொரோனா கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் அண்மையில் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க மருத்துவ ஆய்வு மன்றம் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.

‘ஓமிக்ரான்’ கிருமி மற்ற நாடுகளுக்குப் பரவுவதைத் தடுக்க, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமானங்கள் வந்துசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுவகை கிருமி உருவெடுத்திருப்பது குறித்து கலந்தாலோசிக்க, தேசிய கொரோனா கிருமித்தொற்று தளபத்திய மன்றம் இன்று சனிக்கிழமை அவசரமாகக் கூடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!