கொவிட்-19 நெருக்கடிநிலையால் சிறு பிள்ளைகளைக் கொண்ட குறைந்த வருமானக் குடும்பங்கள் ஆக அதிகமாகப் பாதிப்படைந்துள்ளன. வீட்டிலிருந்து பாடம் கற்கும் அணுகுமுறையால் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்குக் கூடுதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. உதாரணத்துக்கு, தனியார் வீடுகளில் வசிக்கும் பிள்ளைகளில் 98 விழுக்காட்டினருக்குக் கணினி அல்லது 'டேப்லட்' உள்ளன. ஆனால் வாடகை வீட்டில் வசிக்கும்
பிள்ளைகளில் 88 விழுக்காட்டினருக்கு மட்டுமே இந்தச் சாதனங்கள் உள்ளன.
3,108 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு வயதுக்கும் ஒன்பது வயதுக்கும் இடைப்பட்ட 4,355
பிள்ளைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கெடுத்த குடும்பங்களில் பத்து விழுக்காட்டு குடும்பங்கள் வேலை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. அக்குடும்பங்களில் குறைந்தது ஒருவர் தமது வேலையை இழந்துள்ளார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களில் 20 விழுக்காடு குடும்பங்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்தறை, எக்செக்யூட்டிவ், தனியார் வீடுகளில் வசிப்போரைவிட வீவக வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் வேலை இழப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குடும்பத்தின் ஒரு மாத வருமானத்துக்கு ஈடான சேமிப்பு தங்களுக்கு இல்லை என்று பத்தில் மூன்று குடும்பங்கள் மனந்திறந்துள்ளன.
வாடகை வீடுகளில் தங்குவோரில் 50 விழுக்காட்டினர் இந்த நிலையை எதிர்நோக்குகின்றனர்.
"பொருளியல் பாதிப்பு, வீட்டில்இருந்து வேலை செய்வது, பள்ளிகள் மூடப்பட்டது, சமூக இடைவெளி விதிமுறைகள் ஆகியவை குடும்பங்களின் அன்றாட
வாழ்க்கைமுறையை இதற்கு முன் இல்லாத அளவில் மாற்றி, பாதிப்பு களை ஏற்படுத்தியுள்ளன. கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக வசதி குறைந்த குடும்பங்கள் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கும் நிலை ஏற்படக்கூடாது.
"அடுத்தடுத்த தலைமுறை
களுக்கு அந்தப் பாதிப்புகள் சென்றுவிடக்கூடாது. எனவே. வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்," என்று தி சன்டே டைம்ஸ் நாளி
தழிடம் முதன்மை ஆய்வாளர்
பேராசிரியர் ஜீன் யேங் தெரிவித்தார். கொவிட்-19 நெருக்கடிநிலையால் பல சிங்கப்பூரர்கள் பாதிப்படைந்திருப்பது குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்குத் தெரியும் என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார். அதிலும், வசதி குறைந்தவர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை அமைச்சு நன்கு அறிந்திருக்கிறது என்றார் அவர்.
நெருக்கடிநிலையால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் குறைக்க சில ஆதரவுத் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருப்
பதாக அமைச்சு கூறியது.
கொவிட்-19 மீட்சி மானியம், தற்காலிக நிவாரண நிதி போன்ற திட்டங்கள் மூலம் வேலை இழந்து அல்லது சம்பளம் குறைக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு நிதியுதவி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.