பிரதமர்: தளர்வு தடைப்படலாம் ‘ஓமிக்ரான்’ கொவிட்-19 கிருமி வகை பரவல் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது

புதிய உரு­மா­றிய கொவிட்-19 கிருமியான ஓமிக்­ரானை சிங்­கப்­பூர் அணுக்­க­மா­க கண்­கா­ணித்து வரு­கிறது. தளர்த்­தப்­பட்டு வரும் முன்­னெச்­ச­ரிக்­கைக் கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் கடு­மை­யாக்­கப்­ப­ட­லாம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

இடர்­களை எதிர்­கொள்ள சிங்­கப்­பூர் மன­த­ள­வில் தயா­ராக இருக்க வேண்­டும் என்­றார் அவர். எனி­னும், சிங்­கப்­பூர் மக்­கள் கடந்த ஈராண்­டு­க­ளாக கிரு­மிப்­ப­ர­வ­லைக் கையாண்ட விதத்­தில் முன்­னேற்­றம் கண்­டி­ருப்­ப­தைச் சுட்­டிய திரு லீ, கொரோனோ கிரு­மி­யு­டன் சிங்­கப்­பூர் வாழ­மு­டி­யும் என்று தாம் நம்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

மக்­கள் செயல் கட்சி (மசெக) மாநாட்­டில் நேற்று உரை­யாற்­றிய திரு லீ, ஓமிக்­ரான் குறித்து முதல் முறை­யா­கப் பேசி­னார்.

"சிங்­கப்­பூர் இதை மிக அணுக் கமா­க கண்­கா­ணித்து வரு­கிறது. உறு­தி­யாக எது­வும் தெரி­ய­வில்லை. ஆனால் சில அடி­கள் முன்­வைக்­கும்­போது, சில அடி­களைப் பின்­வைக்­கும் நிலைக்கு நாம் தள்­ளப்­ப­ட­லாம்.

"ஆனால், இதை­யெல்­லாம் கடந்து, இறு­தி­யில், கிரு­மி­யு­டன் வாழ்­வ­தற்­கான வழியை சிங்­கப்பூர் கண்­டறியும். அனைத்தையும் பாது­காப்­பாக மீண்­டும் தொடங்­கும்," என்ற திரு லீ நம்­பிக்கை தெரி­வித்­தார்.

கவ­லைக்­கு­ரிய கொவிட்-19 கிரு­மி­யின் திரிபு என ஓமிக்­ரானை உலக சுகா­தார நிறு­வ­னம் வகைப்­படுத்­தி­யுள்­ளது. வேக­மா­கப் பரவும் அபா­யம் கொண்ட இந்த புதிய கொரோனா கிருமி குறித்து உலக நாடு­கள் அச்­சத்­தில் உள்­ளன. பல நாடு­கள் தென்­னாப்­பி­ரிக்­கா­வுக்­குப் பய­ணத் தடை விதித்­துள்­ளன.

தென்­னாப்­பி­ரிக்­கா­வின் கௌடெங் மாநி­லத்­தில் முதன்­மு­த­லில் கண்­ட­றி­யப்­பட்ட ஓமிக்­ரா­னின் 'ஸ்பைக்' புர­தத்­தில் அதிக எண்­ணிக்­கை­யி­லான பிறழ்­வு­கள் கண்­ட­றி­யப்­பட்­ட­தால் இது கவ­லைக்­கு­ரிய ஒரு திரி­பாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டது

இதன் சில பிறழ்­வு­கள் கார­ண­மாக இதற்கு பர­வும் தன்மை, தொற்­றும் தன்மை, உட­லில் அதி­க­மான பாதிப்பை உண்­டாக்­கும் தன்மை ஆகி­யவை உள்­ளன. ஏற்கெ­னவே கிரு­மித்­தொற்று ஏற்பட்­ட­வர்­க­ளுக்­கும் மீண்­டும் தொற்­றும் வாய்ப்­புள்­ளது.

பல பாது­காப்பு நட­வ­டிக்­கை­களின் மூலம் கொவிட்-19 கிருமிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் வைத்­துள்ள சிங்­கப்­பூர், தொற்று அள­வைச் சமா­ளித்து வரு­கிறது. கடந்த வாரம், கடை­களில் உணவு உண்­பது, வீடு­க­ளுக்­குச் செல்­வ­தற்­கான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு ஐவர்வரை ஒன்றுகூட அனு­ம­திக்­கப்­பட்­டது. சில சமூ­கச் செயல்­பா­டு­கள் மீதான கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­பட்­டன.

"கடந்த இரண்டு ஆண்­டு­கள், சிங்­கப்­பூ­ரின் சுகா­தார செயல்­பாடு­க­ளு­டன் சமூ­கப் பிணைப்­பு­கள், அர­சி­யல் விருப்­பங்­க­ளை­யும் சோதித்­துள்­ளன," என்று பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

மேலும் செய்தி பக்கம் 2

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!