ஹெலிகாப்டர், குதிரைகளுடன் வி.கே.கே. மனைவியின் இறுதி ஊர்வலம்; போலிஸ் விசாரணை

ஹெலி­காப்­டர் மலர் தூவ, குதி­ரை­கள் அணி­வ­குக்க மலே­சி­யா­வின் ஈப்போ நக­ரில் நடந்த அம­ரர் திரு வி.கே.கல்­யா­ண­சுந்­த­ரத்­தின் மனைவியின் இறுதி ஊர்­வ­லத்­தில் கொவிட்-19 பாது­காப்பு விதிமீறல்­கள் குறித்து மலே­சிய போலி­சார் விசா­ரணை செய்­கின்­ற­னர்.

93 வய­தா­ன அம்­ம­ணி­யம்­மாள் கடந்த 25ஆம் தேதி உயி­ரி­ழந்தார். அவ­ரது இறுதி ஊர்­வ­லம் நேற்று முன்­தி­னம் நடந்தது.

தமி­ழ­கம் திரு­வா­ரூ­ரைச் சேர்ந்த வீர­பத்­தி­ரன் கிருஷ்­ணன் கல்­யா­ண­சுந்­த­ரம், துணிக்­கடை உள்­ளிட்ட பல தொழில்­களில் ஈடு­பட்­ட­வர்.சிங்­கப்­பூர், மலே­சியா, தமி­ழ­கத்­தில்­பி­ர­ப­ல­மாக விளங்கிய வி.கே.கல்­யா­ண­சுந்­த­ரம் அண்ட் சன்ஸ், 1990களில் சிங்­கப்­பூரில் இருந்த தனது கடையை மூடியது. தற்­போது பேராக் மாநி­லத்­தின் ஈப்போ நகரில் இக்­கடை செயல்­ப­டு­கிறது.

வாத்­திய இசை­யு­டன் செல்­லும் திரு­வாட்டி அம்­ம­ணி­யம்­மா­ளின் இறுதி ஊர்­வ­லக் காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லா­கி­யுள்­ளது. இறந்­த­வ­ரின் வீட்­டி­லி­ருந்து அடக்­கம் செய்­யும் இடம்­வ­ரை­யில் சிலர் குதி­ரை­களில் அணி­வ­குத்துச் சென்றனர். இதுபற்றி போலிசில் புகார் செய்­யப்­பட்­டுள்ள­தாக பேராக் மாநிலப் போலிஸ் தலை­வர் மியோர் ஃபாரிடா­லத்­ராஷ் வாஹிட் மலேசிய ஊடகத்திடம் கூறி­னார்.

“ஊர்­வ­லத்­துக்கும் ஹெலிகாப்­டர் பறக்கவும் அனு­மதி பெறப்­பட்டதா என்­பது விசா­ரிக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மலே­சிய தேசிய பாது­காப்பு மன்­ற விதி­மு­றை­க­ளின்­படி, அணி­வகுப்பு, ஊர்­வ­லத்துக்கு குறிப்­பாக இறு­திச் சடங்கு ஊர்­வலத்­துக்கு அனு­ம­தி­யில்லை,” என்றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!